Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு வலுசக்தி அமைச்சின் அறிவிப்பு

Oct 6, 2026 - 07:36 AM

தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு வலுசக்தி அமைச்சின் அறிவிப்பு
Mobitel Inner 1278

தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களுக்கு அறிவிக்க வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

அமைச்சின் செயலாளரால் இன்று (06) இது தொடர்பில் எழுத்துமூலம் அறிவிக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார். 

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால், எரிபொருள் விற்பனை மூலம் நட்டம் ஏற்படுவதாகக் கூறி, நாட்டில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தமது எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதன் காரணமாக நாட்டின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதுடன், எரிபொருளைப் பெறுவதற்காக நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதையும் காணக்கூடியதாக உள்ளது. 

இது தொடர்பில் 'அத தெரண' வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலகவிடம் வினவிய போது, தற்போதைய சூழ்நிலையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இதற்கு மேலதிகமாக, குறித்த நிறுவனங்களை குறைந்தபட்ச எரிபொருள் இருப்பைப் பேணுமாறு அறிவிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

தற்போதைய எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிரப்பு நிலையங்களுக்கு அதிகளவான எரிபொருளை விநியோகிப்பதற்கும் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 

இதேவேளை, இந்தப் பிரச்சினை தொடர்பில் நாளை (07) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்தக் கலந்துரையாடல் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ளது. 

இதேவேளை, நிலவும் எரிபொருள் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக பெற்றோலிய விநியோகத்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278