Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
இந்தியா
அண்ணன் சீர் திட்டத்துக்கு 812 கோடி நிதி ஒதுக்கீடு

Oct 6, 2026 - 07:17 AM

அண்ணன் சீர் திட்டத்துக்கு 812 கோடி நிதி ஒதுக்கீடு
Mobitel Inner 1278

பெண்களுக்கு திருமணத்தின்போது 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுச்சேலையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டத்திற்கு ரூ.812 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழர் மரபில் திருமணத்தின்போது அண்ணன் வழங்கும் 'சீர்' என்பது அன்பு, பாசம், பாதுகாப்பு மற்றும் பொறுப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. 

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சம் திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமணங்களில் மணப்பெண்களுக்கு அண்ணனாக, பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் எப்போதும் அக்கறை கொண்டு அரசு துணை நிற்கும் என்பது கொள்கை உறுதியாகும். 

இதை வெளிப்படுத்தும் விதமாக, புதிய வாழ்க்கையை தொடங்கும் மணப்பெண்களுக்கு அன்புப்பரிசாக 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்பட வேண்டும் என்பது அரசின் தொலைநோக்கு திட்டமாகும். 

அதன் அடிப்படையில் கடந்த 5.8.2026 அன்று 2026-27-ம் ஆண்டுக்கான திருத்த வரவு செலவு திட்ட மதிப்பீட்டு உரையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, அரசுக்கு சமூக நல இயக்குனர் எழுதிய கடிதத்தில், அண்ணன் சீர் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்த நிர்வாக அனுமதியும், நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடும் வழங்க வேண்டுமென்றும் அரசைக் கோரியுள்ளார். 

அவரது கருத்துரு பரிசீலனை செய்யப்பட்டு, அண்ணன் சீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆணையை அரசு வெளியிடுகிறது. 

அதன்படி, தமிழ்நாட்டில் ரூ.2.5 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமணத்தின் போது 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுச்சேலையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்த நிர்வாக அனுமதியும், இதற்கான தொகையாக நடப்பு நிதியாண்டில் முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது. 

தமிழ்நாட்டில் நடைபெறும் திருமணங்களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுடைய மணப்பெண்களுக்கு 8 கிராம் (22 கரட்) தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்பட உள்ளன. 

இத்திட்டத்திற்கான தகுதி மற்றும் வழிகாட்டு நெறி முறைகள் தனியே வெளியிடப்படும். 

தமிழ்நாடு திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின்படி, திறந்த வெளி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, தகுதியான ஒப்பந்ததாரர் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்க நாணயமும், பட்டுப்புடவையும் கொள்முதல் செய்யப்படும். 

தங்க நாணயத்தின் கொள்முதல் விலை, கொள்முதல் ஆணை வழங்கப்படும் நாளன்று காலையில் ஐ.பி.ஜே.ஏ. அமைப்பினால் நிர்ணயிக்கப்படும் விலையை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படும். 

இத்திட்டம், அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் நடைபெறும் திருமணங்களுக்கு பொருந்தும். இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278