Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
ஞானசாரவின் காவியாடை தொடர்பில் சிறை ஆணையாளருக்கு கடிதம்

Oct 6, 2026 - 11:30 AM

ஞானசாரவின் காவியாடை தொடர்பில் சிறை ஆணையாளருக்கு கடிதம்
Mobitel Inner 1278

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் துறவற நிலையை இழக்கும் நிலையை அடைந்த ஒரு துறவியாகவோ அல்லது அவரது காவியாடையைக் களைவதற்குத் தக்க பாரதூரமான காரணங்களோ தமது சங்க சபைக்குச் சுட்டிக்காட்டப்படவில்லை என கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஶ்ரீதர்ம மகா சங்க சபையின் கொடபிட்டியே ராகுல தேரர் தெரிவித்துள்ளார். 

சாசன ரீதியாக அவர் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணையொன்றை நடத்தி காவியாடையைக் களைவதா அல்லது காவியாடையுடன் இருக்க அனுமதிப்பதா என்பது தமது சங்க சபைக்குரிய பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள அவர், ஞானசார தேரரின் காவியாடையை அகற்றாது, அவர் காவியாடையுடனே தோன்றுவதற்குச் சந்தர்ப்பமளிக்குமாறு அதில் கேட்டுக்கொண்டுள்ளார். 

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அல்லது நீதிமன்றத்தின் மேலாதிக்கம் குறித்து எவ்வித எதிர்ப்பையும் வெளியிடவில்லை எனினும், சிறைச்சாலையினுள் ஞானசார தேரரின் காவியாடையைக் களைவது தொடர்பில் வெளியாகும் ஊடக அறிக்கைகள் குறித்துத் தமது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

துறவியொருவர் காவியாடை அணிவது அல்லது காவியாடையைக் களைவது தொடர்பில் முழுமையான உரிமை குறித்த துறவிக்கும் அவர் சார்ந்த மகா சங்க சபைக்கு மட்டுமே உள்ளதாக இந்தக் கடிதத்தின் ஊடாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது எமது நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள முறைமைக்கமைய, உரிய பீடங்களின் அல்லது மகா சங்கத்தின் மகாநாயக்க தேரரின் அனுமதியுடனே இடம்பெற வேண்டிய சாசன ரீதியான காரியமாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

மேலும், சாசன விதிகளுக்கமைய அவரது காவியாடையை அணிந்திருக்கச் செய்வதும், தேரர் வெளியே அழைத்து வரப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவருக்குரிய காவியாடையுடன் தோன்றுவதற்குச் சந்தர்ப்பமளிப்பதும் இதுவரை சாசன ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பாரம்பரிய விதியாகும் என்றும், அதனைப் புறக்கணிப்பது சாசனத்திற்கு வழங்கப்படும் தவறான முன்னுதாரணமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278