Oct 6, 2026 - 12:02 PM

ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் ஆளுகை மற்றும் நிர்வாகம் தொடர்பான சட்டமூலமும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலமும் சற்றுமுன் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இன்று (06) விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் ஶ்ரீ லங்கா கிரிக்கெட் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.































