Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
உலகம்
நைஜீரியாவில் 32 பேருடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்து!

Oct 6, 2026 - 12:58 PM

நைஜீரியாவில் 32 பேருடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்து!
Mobitel Inner 1278

நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள ஒண்டோ மாநிலத்தில், 32 பேரை ஏற்றிச் சென்ற நைஜீரிய விமானப்படை விமானம் ஒன்று நேற்று (05) விபத்துக்குள்ளானது. 

தெற்கு நைஜீரியாவின் பெனின் நகரிலிருந்து லாகோஸுக்குத் தனது தினசரிப் பணியில் சென்று கொண்டிருந்த விமானம், ஒண்டோ மாநிலத்தின் இக்போகோடாவில் விழுந்து நொறுங்கியது என விமானப்படை செய்தித் தொடர்பாளர் எஹிமென் எஜோடாமே தெரிவித்தார். 

விமானத்தில் 25 பயணிகளும் ஏழு பணியாளர்களும் இருந்ததாக இராணுவம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஃபெஸ்டஸ் கயாமோ செய்தியாளர்களுக்கு பேட்டியில் தெரிவித்தார். 

கடற்படைத் தளம் அருகே விபத்துக்குள்ளான விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

சம்பவ இடத்திற்கு அருகில் ஆறு இருப்பதால், மீட்புக் குழுவினர் படகுகளைப் பயன்படுத்தி தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என செய்தித் தொடர்பாளர் எஹிமென் எஜோடாமே தெரிவித்தார். 

விமானத்தில் இருந்த 32 பேரும் என்ன ஆனார்கள் என்பது குறித்து உறுதியான தகவல் இன்னும் வரவில்லை. 

இதற்கிடையில், ஆற்றங்கரையில் மக்கள் கூட்டம் கூடியிருப்பதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MOST READ

காணொளி
சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

Mobitel 1278