Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
பல்சுவை
அந்தரங்க வாழ்க்கையிலும் அதிகப்படியான சுத்தம்!

Oct 6, 2026 - 11:40 AM

அந்தரங்க வாழ்க்கையிலும் அதிகப்படியான சுத்தம்!
Mobitel Inner 1278

வீட்டை அளவுக்கு அதிகமாகச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற மனைவியின் தீவிரமான பழக்கத்தால் மன உளைச்சலுக்கு ஆளான கணவரொருவர், விவாகரத்து மற்றும் சுமார் 2.40 கோடி ரூபாயை நஷ்டஈடாகக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ள விசித்திரச் சம்பவமொன்று துருக்கியில் இடம்பெற்றுள்ளது. 

துருக்கியைச் சேர்ந்த குறித்த இளம் தம்பதியினருக்குத் திருமணமாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆரம்பத்தில் இயல்பாக இருந்த மனைவியின் சுத்தம் பார்க்கும் பழக்கம் நாளடைவில் குடும்ப வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கும் அளவுக்கு தீவிரமடைந்துள்ளது. 

மனைவி கழிவறையைச் சுத்தம் செய்துவிட்டால், அதனை உடனடியாகக் கணவர் பயன்படுத்தக் கூடாது எனத் தடை விதித்ததுடன், வீட்டில் சமைத்தால் சமையலறை அழுக்காகிவிடும் என்பதற்காக வீட்டில் சமைப்பதையே தவிர்த்து, தினமும் வெளியிலிருந்தே உணவை வரவழைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். 

மேலும் படுக்கையறையில் கணவரின் தலைமுடி ஒன்று உதிர்ந்து விழுந்தாலும் கோபப்படும் மனைவி, கணவன் - மனைவிக்கு இடையிலான அந்தரங்க உறவின் போதும் அதிகப்படியான சுத்தத்தை எதிர்பார்த்துத் தொந்தரவு செய்துள்ளார். 

இதனால் தொடர்ச்சியாகக் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கணவர், 4 வருடத் திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்து நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அத்துடன், தான் அனுபவித்த வேதனைகளுக்காக மனைவியிடமிருந்து 2.5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் 2.40 கோடி இந்திய ரூபாய்) நஷ்டஈடும் பெற்றுத்தர வேண்டும் எனத் தனது மனுவில் கோரியுள்ளார். 

வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க நினைப்பது நல்ல விஷயம் என்றாலும், அதுவே ஒருவரது வாழ்க்கையை நரகமாக்கி நீதிமன்றம் வரை கொண்டு சென்றுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278