Oct 6, 2026 - 01:32 PM

இலங்கையில் குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களைப் பேணுவது தொடர்பில் அமைச்சின் செயலாளரினால் ஏற்கனவே உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.
இன்று (06) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்காக எங்களால் செய்யக்கூடியது என்னவென்றால், இந்தச் சுமையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொறுப்பேற்று, வழக்கமாக முன்னர் இருந்த சுமார் 54% அளவை தற்போது டீசல் சந்தைக்கு விடுவிக்கும் வகையில் 82% வரை அதிகரித்துள்ளது.
சந்தையின் 82% பங்கை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமே வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.































