Oct 6, 2026 - 03:04 PM

2026/27 பெரும்போகத்தில் நெல் மற்றும் வயல் நிலங்களில் பயிரிடப்படும் ஏனைய களப் பயிர்களுக்காக உர நிதி மானியத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, ஒரு ஹெக்டேருக்கு 30,000 ரூபாய் வீதம் அதிகபட்சமாக 2 ஹெக்டேயர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படவுள்ளது.
2026/27 பெரும்போக உர நிதி மானியத்திற்காக மதிப்பிடப்பட்டுள்ள மொத்தத் தொகை 16 பில்லியன் ரூபாயாகும்.
நெற்செய்கைக்கு மேலதிகமாக, போகங்களுக்கான கூட்டங்களில் தீர்மானிக்கப்படும் மற்றும் விவசாயப் பணிப்பாளர் நாயகத்தினால் பரிந்துரைக்கப்படும் ஏனைய களப் பயிர்களுக்கும் இந்த மானியம் வழங்கப்படவுள்ளது.































