Oct 6, 2026 - 04:12 PM

யாழ்ப்பாணம், தென்மராட்சிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 36 வயதுடைய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீசாலை - புத்தூர் சந்தி பகுதியில் இன்று (06) உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.































