Oct 6, 2026 - 03:14 PM

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி எச். எம். ஆர். எம். திலகரத்ன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக ஜனாதிபதி முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (6) முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
தற்போது வெற்றிடமாக நிலவும் இரண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.































