Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
தனது ஐந்தாவது கிளையை ARCADE INDEPENDENCE SQUARE மையத்தில் திறப்பதன் மூலம் தனது சமையல் விருந்தின் பாரம்பரியத்தை KHAYABAN விரிவுபடுத்துகிறது

Oct 6, 2026 - 06:53 PM

தனது ஐந்தாவது கிளையை ARCADE INDEPENDENCE SQUARE மையத்தில் திறப்பதன் மூலம் தனது சமையல் விருந்தின் பாரம்பரியத்தை KHAYABAN விரிவுபடுத்துகிறது
Mobitel Inner 1278

இலங்கையின் புகழ்பெற்ற பாகிஸ்தானிய உணவு வகைகளுக்கான முக்கிய இடங்களில் ஒன்றான Khayaban, தனது ஐந்தாவது கிளையை புகழ்பெற்ற Arcade Independence Square மையத்தில் திறப்பதன் மூலம் மற்றொரு முக்கிய சாதனை மைல்கல்லை எட்டியுள்ளது. 1998-இல் தொடங்கிய தனது சமையல் பயணத்தைத் தொடரும் Khayaban, தனது விருந்தினர்களுக்கு மறக்க முடியாத உணவு அனுபவங்களை உருவாக்கும் அதே வேளையில், பாகிஸ்தானின் செழுமையான, துடிப்பான மற்றும் தனித்துவமான சுவைகளை இலங்கைக்குக் கொண்டு வருவதில் உறுதியாக உள்ளது. 

Khayaban தொடங்கப்பட்டதிலிருந்து கொழும்பின் வளர்ந்து வரும் சமையல் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்து, பாகிஸ்தானிய உணவு வகைகளின் ஆழத்தையும் பன்முகத்தன்மையையும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. 2022-இல் One Galle Face Mall தொகுதியில் ஒரு புதுப்பொலிவான தொடக்கத்தைத் தொடர்ந்து, இந்த நிறுவனம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் தூரநோக்கு இலக்குடன் தனது பயணத்தைத் தொடர்ந்தது: தொடக்கத்திலிருந்தே Khayaban உணவு மையத்தை வடிவமைத்த மரபுகள், சமையல் குறிப்புகள் மற்றும் விருந்தோம்பலுக்கு உண்மையாக இருந்துகொண்டே, உண்மையான பாகிஸ்தானிய சுவைகளை ஒரு புதிய தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே அந்த இலக்கு. 

Arcade Independence Square மையத்தில் புதிய உணவு டிரக் திறக்கப்படுவது, Khayaban உணவு மையத்தின் வளர்ச்சிப் பயணத்தில் மற்றொரு முக்கிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இது வெறும் விரிவாக்கம் மட்டுமல்ல, கொழும்பின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கைமுறை மையங்களில் ஒன்றில், உண்மையான உணவு வகைகள், அன்பான விருந்தோம்பல் மற்றும் ஒரு தனித்துவமான உணவு அனுபவத்தை வழங்குவதில் இந்த வர்த்தகநாமத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த புதிய இடம் பிரதிபலிக்கிறது. 

இலங்கை முழுவதும் தனித்துவமான பல வர்த்தகநாமங்களை உருவாக்கி விரிவுபடுத்தி வரும் Liberty Lands & Developments (LLD) குழுமத்தின் உணவு மற்றும் பானங்களுக்கான தளமான Food Studio நிறுவனத்தின் ஒரு பகுதியாக Khayaban திகழ்கிறது. வலுவான உணவு சார்ந்த வணிகக் கோட்பாடுகளை உருவாக்கி விரிவுபடுத்துவதில் Food Studio கொண்டுள்ள அவதானத்தின் மூலம், Khayaban தனது பாரம்பரிய பாகிஸ்தானிய உணவு அனுபவத்தின் நம்பகத்தன்மையைத் தக்கவைத்துக்கொண்டு, அதேவேளையில் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் பரந்த அளவிலான விரிவாக்கத்திற்கான தூரநோக்குடனும் தனது இருப்பை வலுப்படுத்தி வருகிறது. 

Khayaban உணவு மையத்தின் பணிப்பாளர் நௌஃபர் காசிம் இது தொடர்பில் கூறுகையில், “1998-இல் நாங்கள் தொடங்கியதிலிருந்து, பாகிஸ்தானின் உண்மையான சுவைகள், பாரம்பரியங்கள் மற்றும் விருந்தோம்பலை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான பேரார்வத்தால் Khayaban எப்போதும் உந்தப்பட்டு வருகிறது. கொழும்பின் உணவுச் சூழலுடன் சேர்ந்து இந்த வர்த்தகநாமம் வளர்ந்து பரிணமித்திருந்தாலும், நாங்கள் ஆற்றும் எல்லாவற்றிலும் அதன் தனித்தன்மையே மையமாக இருந்து வருகிறது. எங்கள் பாகிஸ்தானிய சமையல் கலைஞர்கள், நாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு உணவிலும் தங்களின் நிபுணத்துவம், பாரம்பரிய சமையல் நுட்பங்கள் மற்றும் சுவையின் மீதான பேரார்வத்தைக் கொண்டு வருகிறார்கள். எங்களின் தனித்துவமான பிரியாணிகள் மற்றும் கெபாப் உணவுகள் முதல் எங்களின் பாரம்பரிய கறிகள் மற்றும் விருப்பமான உணவுகள் வரை, ஒவ்வொரு உணவுத் தட்டும் பாகிஸ்தானிய உணவு வகைகளின் செழுமையையும் பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கிறது. எங்களின் ஐந்தாவது கிளையை Arcade Independence Square மையத்தில் திறப்பது Khayaban உணவு மையத்திற்கு ஒரு முக்கியமான சாதனை மைல்கல் ஆகும். இது, இந்த வர்த்தகநாமத்தின் ஒரு பகுதியாக எப்போதும் இருந்து வரும் ஒரு இதமான மற்றும் மறக்க முடியாத உணவு அனுபவத்தைத் தொடர்ந்து வழங்கும் அதே வேளையில், இந்த சுவைகளை இன்னும் பரந்த உணவுப் பிரியர்களுடன் பகிர்ந்து கொள்ள எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. நாங்கள் வளரும்போது, ஆரம்பத்திலிருந்தே Khayaban உணவு மையத்தை வரையறுத்து வந்த பாகிஸ்தானிய விருந்தோம்பலின் பாரம்பரியங்கள், தரம் மற்றும் உண்மையான சாராம்சத்தைப் பாதுகாப்பதில் எங்கள் கவனம் தொடர்ந்து இருக்கும்.” 

கொழும்பின் உணவுச் சூழல், பல்வேறு உலகளாவிய உணவு வகைகளையும் தனித்துவமான சமையல் அனுபவங்களையும் தொடர்ந்து உள்வாங்கி வரும் வேளையில் இந்த விரிவாக்கம் வந்துள்ளது. அசல் சமையல் தயாரிப்புகள், திறமையான கைவினைத்திறன் மற்றும் நேர்மையான விருந்தோம்பல் ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம், விருந்தினர்களுக்கு பாகிஸ்தானிய உணவு வகைகளின் செழுமையை அனுபவிக்கும் வாய்ப்பை Khayaban வழங்குவதோடு, குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் உணவு ஆர்வலர்களுக்கான ஒரு முக்கிய இடத்தையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

Food Studio நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நதீம் கூறுகையில், “Food Studio நிறுவனத்தில் எங்களுக்கு Khayaban எப்போதுமே மிகவும் நெருக்கமான ஒரு வர்த்தகநாமமாக இருந்து வருகிறது. நானும் நவீதும் முதன்முதலில் Food Studio நிறுவனத்தை உருவாக்கி, பல்வேறு உணவு வகைகளை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கத் தொடங்கியபோது, 1990-களில் கொழும்பில் Khayaban எதைக் குறித்தது என்பதைப் பற்றி நாங்கள் நினைவுகூர்ந்தோம். அந்தப் பழைய நினைவுகள்தான், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்த வர்த்தகநாமத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நௌஃபரை அணுக எங்களைத் தூண்டியது. அது புத்துயிர் பெற்றதிலிருந்து மக்கள் அதை ஏற்றுக்கொண்ட விதத்தைப் பார்ப்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. 

One Galle Face தொகுதியில் உள்ள எங்கள் முதன்மைக் கிளையிலிருந்து, கிருலப்பனை மற்றும் நுகேகொடையில் உள்ள Cool Planet எக்ஸ்பிரஸ் கிளைகள் வரை, Khayaban தொடர்ந்து வளர்ந்து புதிய வாடிக்கையாளர்களைக் கண்டறிந்து வருகிறது. Independence Arcade மையத்தில் ஒரு உணவு டிரக்குடன் எங்கள் ஐந்தாவது கிளையைத் திறப்பது எங்களுக்கு மற்றொரு உற்சாகமான சாதனை மைல்கல் ஆகும். இது, கொழும்பு 7-இன் மையப்பகுதியில், நாங்கள் இதற்கு முன் செய்தவற்றிலிருந்து சற்றே மாறுபட்ட, எளிதில் அணுகக்கூடிய, ஆற்றல்மிக்க ஒரு வடிவத்தில் இந்த வர்த்தகநாமத்திற்கு ஓர் இருப்பை வழங்குகிறது. 

Food Studio நிறுவனத்தைப் பொறுத்தவரை, வர்த்தகநாமங்களை உருவாக்குவது என்பது இதுதான்: வலுவான அடையாளம் மற்றும் கதையைக் கொண்ட ஒன்றை எடுத்து, அதை வளர்த்து, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்ல புதிய வழிகளைக் கண்டறிவது. Khayaban இவ்வளவு தூரம் வந்திருப்பதை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், ஆனால் இந்தப் பயணம் இப்போதுதான் தொடங்குகிறது என்றும் நாங்கள் உணர்கிறோம். Khayaban உணவு மையத்தை மேலும் பல பகுதிகளுக்குக் கொண்டு சென்று, கடந்த கால நினைவுகளையும் இன்றைய கொழும்பின் உணவுப் பண்பாட்டில் மிக முக்கியமான இடத்தையும் கொண்டுள்ள ஒரு வர்த்தகநாமத்தைப் பகிர்ந்துகொள்ள முடியும் என நாங்கள் நம்புகிறோம்.” 

பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் புதிய வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளும் உறுதியுடன், Khayaban உணவு மையத்தின் பயணம் தொடர்ந்து வளர்ந்து, கொழும்பின் உணவுப் பிரியர்களுக்கு உண்மையான சுவைகளையும், பாகிஸ்தானியப் பேரார்வத்தையும், மறக்க முடியாத உணவு அனுபவங்களையும் வழங்கி வருகிறது.


MOST READ

காணொளி
பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

Mobitel 1278