Oct 6, 2026 - 07:02 PM

JXG (ஜனசக்தி குழுமம்) நிறுவனத்தின் முதன்மை ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப், Great Place To Work® Sri Lanka வழங்கிய 2026ஆம் ஆண்டிற்கான Sri Lanka's 50 Best Workplaces™ பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அங்கீகாரம் பெற்ற மொத்த 50 பணியிடங்களில், 17 பெரிய (Large), 13 நடுத்தர (Medium), 10 சிறிய (Small) மற்றும் 10 மிகச் சிறிய (Micro) நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. 251 முதல் 500 பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் அடங்கிய நடுத்தரப் பிரிவில் ஜனசக்தி லைஃப் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அங்கீகாரம், ஜனசக்தி லைஃப்பின் வலுவான பணியிடக் கலாசாரம், தொலைநோக்குடைய தலைமைத்துவம் மற்றும் பணியாளர்கள் மதிக்கப்படுகிறார்கள், ஆதரிக்கப்படுகிறார்கள், தங்களது திறன்களை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்ற உணர்வை உருவாக்கும் உள்ளடக்கமான பணிச்சூழலை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இம்முடிவுகள், ஒத்துழைப்பு, நிறுவனத்துடன் நீண்டகால உறவுப்பாடு, வலுவான சொந்தத்துவ உணர்வு மற்றும் மகிழ்ச்சிகரமான, ஈடுபாட்டை ஊக்குவிக்கும் பணிச்சூழல் ஆகியவை அதன் பணியிடக் கலாசாரத்தின் முக்கிய தூண்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த அங்கீகாரம், Great Place To Work® இன் Trust Index™ Employee Experience Survey மற்றும் Culture Audit™ ஆகிய மதிப்பீட்டு செயல்முறைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. Trust Index™ Employee Experience Survey, பணியாளர்களின் நம்பிக்கை, பெருமிதம் மற்றும் பணியிட உறவுகள் குறித்த அனுபவங்களை மதிப்பிடுவதோடு, Culture Audit™, நிறுவனத்தின் மனிதவள நடைமுறைகள் மற்றும் பணியாளர் மையப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை மதிப்பீடு செய்கிறது. மொத்த மதிப்பெண்ணில் Trust Index™ 75% ஐயும் Culture Audit™ மீதமுள்ள 25% ஐயும் பெறுகின்றது. 2025ஆம் ஆண்டு Great Place To Work® Certified™ அந்தஸ்தையும், 88% Employee Trust Index™ பெறுபேற்றையும் பெற்றதைத் தொடர்ந்து, ஜனசக்தி லைஃப் இவ்வருடமும் இந்த அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது, நிறுவனத்தின் சிறந்த பணியாளர் அனுபவம் மற்றும் பணியிட நடைமுறைகளின் தொடர்ச்சியான நிலைத்தன்மையை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே, இலங்கையின் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றிருப்பதும், எமது பணியாளர்கள் அனுபவிக்கும் வலுவான உள்ளடக்கத்தன்மை மற்றும் குழு ஒற்றுமை உணர்வும், எமது பணியிடக் கலாசாரத்தின் வலிமையையும், அதனை வடிவமைக்கும் தலைமைத்துவ அணுகுமுறையையும் பிரதிபலிக்கின்றன. எமது பணியாளர்களிடமிருந்து கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், எமது பணியிடத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும், நாம் அனைவரும் கடைப்பிடிக்கும் விழுமியங்களை மேலும் உறுதிப்படுத்துவதற்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பு மற்றும் நேர்மை ஆகிய எமது அடிப்படை விழுமியங்கள் Great Place To Work® மதிப்பீட்டின் பணியிட ஆரோக்கியக் குறியீடுகளில் தெளிவாக பிரதிபலிக்கின்றன. அதேவேளை, செயல்திறன் சார்ந்த பண்பாடும் புத்தாக்கத்தைத் தழுவும் அணுகுமுறையும் எமது நிறுவனக் கலாசாரத்தின் பிரிக்க முடியாத அம்சங்களாக தொடர்கின்றன. குறிப்பாக, எமது பணியாளர்கள், அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன, தங்களது பங்களிப்பை வழங்குவதற்கு ஊக்கமளிக்கப்படுகின்றனர், மேலும் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்த தேவையான வழிகாட்டலும் ஆதரவும் கிடைக்கின்றன என்ற உணர்வைப் பகிர்ந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
என்றார். இதேவேளை, ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் மனிதவளப் பிரிவுத் தலைவர் தனுஷ்க செனத் D. சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், இச் சாதனை, பணியாளர்களை மையமாகக் கொண்டதும் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டதுமான பணியிடக் கலாசாரத்தை உருவாக்குவதில் எமது பணியாளர்களும் தலைவர்களும் இணைந்து வெளிப்படுத்திய அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். பணியாளர்களின் நலன், வளர்ச்சி மற்றும் உயர் செயல்திறன் ஆகியவை ஒருங்கிணைந்த பயணமாக அமையும் இக் கலாசாரத்தையும், பணியாளர் அனுபவத்தையும் தொடர்ந்து மேலும் வலுப்படுத்துவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம். என்றார்.
அக்கறையுள்ள பணியமர்த்துநராக நீண்டகாலமாக அறியப்படும் ஜனசக்தி லைஃப், செயல்திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றிற்கு தனது நிறுவனக் கலாசாரத்தில் சம அந்தஸ்தை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள்களை பணியாளர்களின் அன்றாட பணி அனுபவத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதை மையமாகக் கொண்டு அதன் மனிதவள மூலோபாயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மாறிவரும் பணியாளர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப முன்னோடியான மற்றும் முற்போக்கான மனிதவள நடைமுறைகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் முக்கிய அம்சமாக, அனைத்து நிலைகளிலும் உள்ள மக்கள் முகாமையாளர்களின் (People Managers) திறன்களை தொடர்ந்து மேம்படுத்தும் reskilling மற்றும் upskilling முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நிறுவனக் கலாசாரத்தை உருவாக்குதல், திறமைகளை வளர்த்தெடுத்தல் மற்றும் செயல்திறனை மேம்படுத்தல் ஆகியவற்றில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இந்நடவடிக்கைகள் அமைகின்றன. தொடர்ச்சியான கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் பணியாளர்கள் தங்களது முழுத் திறனையும் அடைய உதவுவதோடு, நெகிழ்வான (flexible) மற்றும் கலப்பு (Hybrid) பணிமுறைகள் அவர்களுக்கு அதிக சுதந்திரத்தையும், பல்வேறு தேவைகளுக்கேற்ற பணிச்சூழலையும் வழங்குகின்றன. மேலும், திறந்த மற்றும் ஒத்துழைப்புமிக்க பணிச்சூழல், கருத்துப் பரிமாற்றம், பணியாளர் பங்கேற்பு மற்றும் நிறுவனம் முழுவதும் புத்தாக்கத்தையும் ஊக்குவிக்கிறது.
அர்த்தமுள்ள பணியாளர் ஈடுபாடும், முழுமையான நல்வாழ்வும் இப் பணியாளர் அனுபவத்தின் ஒருங்கிணைந்த கூறுகளாகும். படைப்பாற்றல், பரஸ்பர இணைப்பு மற்றும் வலுவான சொந்தத்துவ உணர்வை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளுடன், பணியிட எல்லைகளைத் தாண்டியும் பணியாளர்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது. பல்வேறு பின்னணிகளும், வெவ்வேறான எதிர்பார்ப்புகளும் கொண்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனமாக இருப்பதை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையைப் பின்பற்றாமல், ஒவ்வொரு பணியாளர் பிரிவினரினதும் தேவைகளுக்கேற்ப முன்னெடுப்புகளை வடிவமைப்பதன் மூலம், பொருத்தமான, உள்ளடக்கமான மற்றும் அர்த்தமிக்க பணியாளர் அனுபவத்தை ஜனசக்தி லைஃப் தொடர்ந்து உருவாக்கி வருகிறது.
ஜனசக்தி லைஃப் பற்றி
JXG (ஜனசக்தி குழுமத்தின்) முதன்மை ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப், 1994 ஆம் ஆண்டு முதல் இலங்கையர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு வலுவூட்டி வருகிறது. இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் (IRCSL) உரிமம் பெற்றுள்ள, இது நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.
Great Place To Work® தொடர்பாக
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட Great Place To Work®, High-trust, High-performance™ பணியிடக் கலாச்சாரங்களுக்கான உலகளாவிய அதிகார மையமாகத் திகழ்கிறது. தனக்கே உரிய மதிப்பீட்டுக் கருவிகள், ஆலோசனைச் சேவைகள், மற்றும் Best Workplaces™பட்டியல்கள், பணியிட மதிப்புரைகள் உள்ளிட்ட சான்றிதழ் திட்டங்கள் மூலம் Great Place To Work® சிறப்பான பணியிடக் கலாச்சாரங்களை உருவாக்கவும், நிலைநிறுத்தவும், அங்கீகரிக்கவும் தேவையான அளவுகோல்கள், கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவத்தை வழங்குகிறது. இந்த அமைப்பு, இலங்கை உட்பட ஐந்து கண்டங்களில் உள்ள 170க்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் வணிகங்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்குச் சேவையாற்றுகிறது.
மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள www.greatplacetowork.com அல்லது www.greatplacetowork.lk ஐப் பார்வையிடுங்கள்.
Best Workplaces™List Recognition – 2026 தொடர்பாக
இத் திட்டம், Great Place To Work®இன் கடுமையான two-lens மாதிரியான Trust Index™ Employee Experience Survey மற்றும் Culture Audit™ மக்கள் நடைமுறைப் பகுப்பாய்வுக் கட்டமைப்பு ஆகியவற்றை மேற்கொண்டு Great Place To Work Certified™ பெறுவதற்கான உலகளாவிய தகுதி அளவுகோல்களைப் பூர்த்திசெய்யும் நிறுவனங்களை அங்கீகரிக்கிறது.































