Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
இந்தியா
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு!

Oct 6, 2026 - 08:43 PM

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு!
Mobitel Inner 1278

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.கவில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக, மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.கவில் இணைந்தனர். 

இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட இவ்விரு தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

மதுராந்தகத்தில் 285 வாக்குச்சாவடிகளிலும், தாராபுரத்தில் 302 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 

த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க, இடதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப் போட்டி நிலவிய இந்த இடைத்தேர்தலில், பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். 

தேர்தல் தொடங்கியதும் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்களும் தங்களது வாக்குச்சாவடிகளில் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

நாள் முழுவதும் வாக்குப்பதிவு மிக விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி மதுராந்தகம் தொகுதியில் 83.86 சதவீத வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் 78.53 சதவீத வாக்குகளும் பதிவாகின. 

அதேபோல புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடியில் 78.83 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்த நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

Mobitel 1278