Oct 7, 2026 - 12:50 PM

அடுத்த தலைமுறை சம்பியன் வீரர்களை உருவாக்கும் நோக்கில் 2026 ஜூன் மாதத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட கார்னேஜ் விளையாட்டு அறக்கட்டளை (Carnage Athlete Foundation) இலங்கை விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கான கூடுதல் வாய்ப்புகளை உருவாக்க உழைத்து வருகிறது. திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் இந்த அறக்கட்டளை, வீரர்களின் விளையாட்டுப் பயணத்தின் வெவ்வேறு நிலைகளில் அவர்களுக்குத் தேவையான நிலையான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தனிப்பட்ட கூட்டாண்மைகள் அல்லது ஒரு தடவை மாத்திரம் கிடைக்கும் வெற்றிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், விளையாட்டு மேம்பாட்டிற்கான நீண்டகால வழியை உருவாக்குவதைச் சுற்றியே இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு மற்றும் இலங்கை ரக்பி ஆகியவற்றின் பங்காளராக, உள்ளூர் விளையாட்டுத் துறைக்கு கார்னேஜ் அளித்து வரும் தற்போதைய பங்களிப்பை இது மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த விசேட வேலைத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த கார்னேஜ் நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமாள ஜொயல் திலகரத்ன, “இலங்கையில் விளையாட்டுத் திறமைக்கு எவ்வித பஞ்சமும் இல்லை என்றாலும் வீரர்கள் தங்களது திறமைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல சரியான ஆதரவும் வாய்ப்புகளும் தேவைப்படுகின்றன. கார்னேஜ் விளையாட்டு அறக்கட்டளையின் மூலம், தனிப்பட்ட சாதனைகளுக்கு அப்பால் விளையாட்டுத் துறையில் ஒரு நீண்டகால நேர்மறை தாக்கத்தை உருவாக்க நாங்கள் எதிபார்க்கிகிறோம். நமது விளையாட்டு வீரர்கள் இதுவரை அடைந்துள்ள சாதனைகள் குறித்து நாங்கள் பெருமையடைகிறோம். மேலும், இந்த வெற்றிகளை ஒரு பெரிய பயணத்தின் ஆரம்பமாகவே நாங்கள் பார்க்கிறோம்.” என்று தெரிவித்தார்.
இந்த அறக்கட்டளையின் சமீபத்திய வெற்றிகளில் ஒன்றாக, IRONMAN 70.3 உலக சம்பியன்ஷிப்பில் போட்டியிட்ட முதல் பார்வையற்ற இலங்கை வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை காலித் ஒஸ்மான் படைத்துள்ளார். தனது வழிகாட்டியான மிதுன் லியனகேவுடன் இணைந்து போட்டியிட்ட ஒஸ்மான், மாற்றுத்திறனாளிகளுக்கான திறந்த பிரிவில் ((Para Open Category) முதலிடத்தைப் பிடித்து, இலங்கை மாற்றுத்திறனாளி விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய வரலாற்று சாதனை படைத்தார். வலு உயர்த்துதல் வீரர்களான உவிந்து ஜயசிங்க மற்றும் ரஷித டி சில்வா ஆகிய இருவரும் 2026 பொதுநலவாய வலு உயர்த்துதல் சம்பியன்ஷிப்பில் சிறந்த திறமையை வெளிப்படுத்தினர். குறித்த போட்டியில் 10ஆவது இடத்தில் இருந்து முன்னேறி வந்த உவிந்து ஜயசிங்க வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார், அதேவேளையில் ரஷித டி சில்வா இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைப் வென்றார்.
கார்னேஜ் விளையாட்டு அறக்கட்டளையின் விளையாட்டு வீரர்கள், விளையாட்டுப் போட்டிகளுக்கு அப்பால் சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தவும் தங்களது திறமையைப் பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு நிகழ்வாக, இந்த அறக்கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புகழ்பெற்ற நீண்ட தூர ஓட்ட வீராங்கனையான கெத்ரின் ஸ்மார்ட், ஆதரவற்ற உள்ளூர் சமூகங்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டும் நோக்கில் இலங்கை முழுவதும் 330 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் ஓடியமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் பதக்கங்களை வெல்வது முதல் வளர்ந்து வரும் கனிஷ்ட வீரர்களை உருவாக்குவது வரை, இந்த சாதனைகள் அனைத்து விளையாட்டுத் துறைகளிலும் வீரர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், சர்வதேச அரங்கில் இலங்கை விளையாட்டுத் துறை தனது இருப்பை வலுவாகப் பதிப்பதற்கும் கார்னேஜ் விளையாட்டு அறக்கட்டளை கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன.
கார்னேஜ் என்பது இலட்சியம், மன உறுதி மற்றும் தொடர்ச்சியான சிறப்பிற்கான தேடலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு இலங்கையின் முன்னணி வர்த்தக நாமமாகும். கடின உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் இந்த வர்த்தக நாமம், தனிநபர்கள் தங்களது Activewear எல்லைகளைத் தாண்டி இலக்குகளை அடைய ஊக்குவிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கி வருகிறது. இலங்கையின் முதன்மை Activewear மற்றும் Lifestyle வர்த்தக நாமமாக விளங்கும் கார்னேஜ், செயல்திறன், நோக்கம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு கலாச்சாரத்தைத் தொடர்ந்து கட்டியெழுப்புகிறது.































