Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
எல் நினோ நிலையைத் தாண்டி - காலநிலை மாற்றங்களுக்கு நீண்ட காலமாகத் தாங்கக்கூடிய ஒரு பயிர்ச்செய்கைத் துறையை உருவாக்குவதற்கு...

Oct 7, 2026 - 12:59 PM

எல் நினோ நிலையைத் தாண்டி - காலநிலை மாற்றங்களுக்கு நீண்ட காலமாகத் தாங்கக்கூடிய ஒரு பயிர்ச்செய்கைத் துறையை உருவாக்குவதற்கு...
Mobitel Inner 1278

தற்போதைய எல் நினோ நிலைமையின் காரணமாக இலங்கையின் பயிர்ச்செய்கைத் துறை எதிர்கொண்டுள்ள முக்கிய சவாலாக காலநிலைத் தாங்குதிறன் மாறியுள்ளது. தேசிய அனர்த்த நிவாரண சேவை மையத்தின் தரவுகளின்படி, எல் நினோ நிலைமையுடன் தொடர்புடைய வறட்சியான காலநிலை காரணமாக அம்பாறை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய ஏழு மாவட்டங்களில் 25,563 குடும்பங்களைச் சேர்ந்த 81,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய இந்த நிலைமைக்கு பதிலளிக்கும் வகையில், அரசாங்கம் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் நீரின் அளவை 6 லிற்றரிலிருந்து 15 லிற்றராக உயர்த்தியுள்ளதுடன், 324 நீர் பவுசர்களை ஈடுபடுத்தி நிவாரண நடவடிக்கைகளுக்காக 4.8 பில்லியன் ரூபாவையும் ஒதுக்கியுள்ளது. 

வறண்ட காலநிலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பல மாவட்டங்கள் முக்கிய பயிர்ச்செய்கை மண்டலங்களுக்கு அருகில் அமைந்துள்ளது ஒரு முக்கியமான சமிக்ஞையாகும். எல் நினோ தோட்ட எல்லையில் நிற்கவில்லை. இரத்தினபுரி, காலி சுற்றியுள்ள தாழ்நில தேயிலை மற்றும் றப்பர் பயிர்செய்கையிலிருந்து தொடங்கி கண்டி மத்திய மலைநாட்டு தோட்டப் பகுதிகள் வழியாக நுவரெலியா மற்றும் பதுளை உயர்நில தேயிலை பயிர்செய்கைகள் வரை அனைத்து உயர மட்டங்களும் அதன் தாக்கத்திற்கு உள்ளாகயுள்ளன. 

தாழ்நில பயிர்ச்செய்கை பகுதிகளுக்கு அதன் தாக்கம் விரைவாக உணரப்படுகிறது, ஏனெனில் நீண்டகால வெப்பநிலை மற்றும் மண்ணின் ஈரப்பதம் குறைவதால் சில வாரங்களுக்குள் அறுவடை குறையக்கூடும். உயர்நில தேயிலை பயிர்செய்கை குறுகியகால வறண்ட நிலைமைகளுக்கு ஒப்பீட்டளவில் ஓரளவு பாதுகாப்பைப் பெறுகிறது, ஆனால் அந்தப் பகுதிகள் வேறுவிதமான மெதுவான ஆபத்தை எதிர்கொண்டு வருகின்றன. அதாவது இரவு வெப்பநிலை படிப்படியாக உயர்வதாகும். 

பேராதனை பல்கலைக்கழகத்தின் பயிர்ச்செய்கை அறிவியல் பற்றிய சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரபே காட்டுவது என்னவென்றால், பொது விவாதத்தில் பெரும்பாலும் தெளிவாக வேறுபடுத்தப்படாத ஒரு விஷயம் உள்ளது. “எல் நினோ என்பது காலநிலை மாற்றத்தால் உருவான ஒரு நிலைமை அல்ல. அது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் ஒரு இயற்கையான காலநிலை மாறுபாடாகும். ஆனால் அதனால் விவசாய அமைப்புகளின் தாங்குதிறனை உருவாக்குவது அவசியமில்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. அத்தகைய நடவடிக்கைகள் எல் நினோ போன்ற கடுமையான காலநிலை நிலைமைகளின் தாக்கத்தைக் குறைக்க நேரடியாக உதவுகின்றன.” 

அத்தகைய தாங்குதிறனை உருவாக்குவது ஒரு குறுகியகால செயல்முறை அல்ல. இலங்கையின் முதல் வறட்சியைத் தாங்கும் தேயிலை ரகத்தை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் 2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. அது பல ஆண்டுகளின் ஆராய்ச்சியின் விளைவாகும். ஒரு புதிய தேயிலை ரகத்தை உருவாக்க பொதுவாக சுமார் 25 ஆண்டுகள் ஆகும், என்று பேராசிரியர் மாரபே குறிப்பிடுகிறார். இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் குறுகியகால நிதி சுழற்சிகளுக்கு மட்டுப்படாமல் பயிர்ச்செய்கை ஆராய்ச்சிக்காக நீண்டகால மற்றும் தொடர்ச்சியான முதலீடு தேவை என்று வலியுறுத்துவதும் இந்தக் காரணத்தினால்தான். 

அந்த நீண்டகால அணுகுமுறை தற்போது கள மட்டத்திலும் காணக்கூடியதாக உள்ளது. உடபுஸ்ஸல்லாவை பெருந்தோட்ட நிறுவனம் தற்போதைய வறட்சி நிலைமைக்கு ஈடுகொடுத்துள்ளது ஒரு படிநிலைக்கு மட்டுப்பட்ட தீர்வின் மூலம் அல்ல, ஒருங்கிணைந்த கள திட்டத்தின் மூலமாகும். தேயிலைச் செடிகளை ஈரப்பத அழுத்தத்திலிருந்து பாதுகாக்க தாய்த் தேயிலை தளிர்களை பறிப்பதை கட்டாயமாக்கியுள்ளதுடன், இலைகளில் தெளிக்கப்படும் உரங்களின் பயன்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கைகளுக்கு நீரை திருப்பிவிடுவதும் அதனுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும், நிழல் கவசங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இலைகளில் உள்ள ஸ்டோமாட்டா வழியாக நிகழும் நீர் இழப்பை கட்டுப்படுத்த பொட்டாசியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வறண்ட காலம் வருவதற்கு முன்பே வடிகால்கள் தயார் செய்யப்பட்டு, வேர் அமைப்புகளுக்கு இடையே ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தோட்ட கட்டிடங்களில் சூரிய சக்தி அமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன, இதன் மூலம் நீர்மின்சாரத்தின் மீதான அழுத்தம் குறைந்து, தக்கவைக்கப்பட்ட நீரை குடிநீர் விநியோகம் மற்றும் நீர்ப்பாசனத்திற்காக கீழ் பகுதிகளுக்கு வெளியிட அதிக வாய்ப்பு கிடைக்கும். பிரவுன்ஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் மாத்தறை பிராந்தியத்தில் தோட்டங்களைச் சுற்றியுள்ள காலநிலைத் தாங்குதிறன், நீர் முகாமைத்துவம், மண் பாதுகாப்பு மற்றும் அனர்த்த தயார்நிலை ஆகிய துறைகளை ஒன்றிணைத்து செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிய பயிர்ச்செய்கை நிலங்கள் மற்றும் மரக்கன்று நாற்றங்கால்களுக்கு நீர் பவுசர்கள் மற்றும் தெளிப்பான் அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, இளம் தேயிலை பயிர்ச்செய்கைகளில் மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ள பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

வறண்ட காலத்தில் தாவரங்களின் சரியான பிழைப்பைப் பாதுகாக்கும் நோக்கில் நிழல் மரங்களை வெட்டுதல் மற்றும் தேயிலை புதர்களை வெட்டுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் வறண்ட நிலைமைக்கு விரைவான விவசாய அறிவியல் பதிலளிப்பாக இலைகளில் பொட்டாசியம் இடுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

அனர்த்த ஆபத்து முகாமைத்துவம் தொடர்பிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆபத்தான வீடுகள் மற்றும் மண்சரிவு அச்சுறுத்தல் உள்ள இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதுடன், அவை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளின்படி மதிப்பிடப்படுகின்றன. தேவையான சந்தர்ப்பங்களில் தொடர்புடைய அரச நிறுவனங்களுடன் கலந்துரையாடி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீள்குடியேற்றம் செய்வதற்கான திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. 

களனிவெலி பெருந்தோட்ட நிறுவனம் மேலும் ஒரு நீண்டகால அணுகுமுறையைப் பின்பற்றி, காலநிலைத் தாங்குதிறனை ஒரு வறட்சி அல்லது ஒரு அனர்த்த நிகழ்வுக்கான பதிலளிப்பாக மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட வேண்டிய ஒரு அமைப்பாகக் கருதி அதன் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. 

ஹல்கொல்ல தோட்டத்தில் செயல்படுத்தப்படும் வேளாண் வனவளர்ப்பு முன்னோடி திட்டம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இலங்கை மற்றும் சர்வதேச விஞ்ஞானிகளுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த முறை, பல அடுக்கு தாவர மூடியின் மூலம் மண் பாதுகாப்பு, நீர் தக்கவைப்பு மற்றும் கூடுதல் வருமான வழிகளை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களை ஒரே நேரத்தில் நிறைவேற்றுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மாதிரி மற்ற பயிர்ச்செய்கைத் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. 

களனிவெலி பெருந்தோட்ட நிறுவனம் உலகின் முதல் regenagri சான்றிதழைப் பெற்ற பெருந்தோட்டக் கம்பெனியாகவும், ஹல்கொல்ல தோட்டம் அந்தச் சான்றிதழைப் பெற்ற உலகின் முதல் தேயிலை பயிர்ச்செய்கை நிலமாகவும் மாறியுள்ளது. இந்த நடைமுறைக்கு பேராதனை பல்கலைக்கழகம், நெதர்லாந்தின் வாகனிங்கன் பல்கலைக்கழகம் மற்றும் IUCN Sri Lanka உடன் பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்ட ஆராய்ச்சி ஒத்துழைப்புகளும் அடிப்படையாக உள்ளன. 

ஹேலீஸ் பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த ஹொரணை பெருந்தோட்ட நிறுவனம், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காலநிலை ஆபத்துகள் மற்றும் பயிர்ச்செய்கை முகாமைத்துவத்திற்கு இடையிலான இடைவெளியை எவ்வாறு நிரப்புவது என்பதைக் காட்டும் மற்றொரு எடுத்துக்காட்டாகும். ஆர்தர் சி. கிளார்க் மையத்துடன் இணைந்து நிறுவப்பட்ட காலநிலை கண்காணிப்பு நிலையங்கள் வெப்பநிலை, மழைவீழ்ச்சி மற்றும் மண்ணின் ஈரப்பதம் பற்றிய முன்னெச்சரிக்கைகளை வழங்குவதுடன், ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிருமி நாசினிபிரச்சினைகளை அடையாளம் காணுதல் மேற்கொள்ளப்படுகிறது. கோப்பி பயிர்ச்செய்கையில் நீர் மற்றும் உரத்தை ஒரே நேரத்தில் திறம்பட வழங்கும் ஸ்மார்ட் ஃபெர்டிகேஷன் முறைகளைப் பயன்படுத்தி நீர் வீணாதலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த எல்லா எடுத்துக்காட்டுகளையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளும்போது தெரிவது என்னவென்றால், கொள்கைகளும் அரச கட்டமைப்புகளும் கள மட்டத்தை அடையும் வரை காத்திருக்காமல், பயிர்ச்செய்கைத் துறை அதன் சொந்த முன்முயற்சியில் செயல்பட்டு வருகிறது என்பதே. பிராந்திய தோட்டக் கம்பெனிகள் ஆராய்ச்சி கூட்டாண்மைகளை உருவாக்கி, கண்காணிப்பு தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்து, காலநிலை ஆபத்து திட்டமிடலை தினசரி தோட்ட முகாமைத்துவத்தின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளன. பல சந்தர்ப்பங்களில் இத்தகைய நடவடிக்கைகள் தேசிய கொள்கை கட்டமைப்புகள் கள மட்டத்தை அடைவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டிருப்பதும் ஒரு தனித்துவமாகும். 

பேராசிரியர் புத்தி மாரபே வலியுறுத்துவது போல், பொருளாதார யதார்த்தத்துடன் இணைந்த தொடர்ச்சியான திறன் மேம்பாடு இதில் ஒரு அடிப்படைப் பகுதியாகும். உண்மையான பொருளாதார ஆபத்து மக்களுக்குத் தெளிவாகத் தெரிந்தால் அவர்கள் பதிலளிக்கிறார்கள். ஒவ்வொரு தோட்டப் பயிரும் அயல்நாட்டு செலாவணியை ஈட்டும் ஏற்றுமதிப் பயிராகும், என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.


MOST READ

காணொளி
சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

Mobitel 1278