Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
வீதி விபத்தில் களனிப் பல்கலைக்கழக மாணவன் பலி!

Oct 8, 2026 - 10:04 AM

வீதி விபத்தில் களனிப் பல்கலைக்கழக மாணவன் பலி!
Mobitel Inner 1278

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். 

பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று சுற்றுலாவுக்காக காலிப் பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்த போதே, மாணவர் ஒருவர் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து, எதிரே வந்த பாடசாலை வேன் ஒன்றில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார். 

விபத்துக்குள்ளான மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் சித்தும் சங்கல்ப என்ற 21 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது. 

உயிரிழந்த மாணவர் தனது 5 நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வீதியின் வலதுபுறமாகச் சரிந்து விழுந்து, எதிர்த்திசையில் இருந்து வந்த பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கியுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

விபத்து நடந்த தருணத்தில் காலி வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, பின்னர் பொலிஸார் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினர். 

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

இந்த விபத்துச் சம்பவம் அருகில் இருந்த கண்காணிப்பு கெமராவில் (CCTV) பதிவாகியுள்ளது.


MOST READ

காணொளி
சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

Mobitel 1278