Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
இந்தியா
அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பால் அதிர்ச்சி

Oct 8, 2026 - 10:24 AM

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பால் அதிர்ச்சி
Mobitel Inner 1278

தமிழகம் பழனி அருகே, மானுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில், விஷமிகள் மனிதக்கழிவை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே, மானுார் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், 120க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, கடந்த 5ஆம் திகதி பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. 

அன்று காலை, மாணவர்களுக்கு உணவு சமைக்க வந்த பெண், அங்கு பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியின் குழாய் உடைக்கப்பட்டு இருப்பதை கவனித்தார். பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தார். நிர்வாகத்தினர், குடிநீர் தொட்டியை திறந்து பார்த்த போது, மனிதக்கழிவு கலக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தொட்டியில் இருந்த கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர். பள்ளி விடுமுறை நாளில், விஷமிகள், குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்துள்ளனர். 

இரு நாட்களுக்கு பின், நேற்று இவ்விவகாரம் மாணவர்களின் பெற்றோருக்கு தெரியவர, பள்ளியில் திரண்டனர். இதுபோன்ற விஷம செயலில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸில் புகார் அளிக்க, மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தினர்.


MOST READ

காணொளி
சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

Mobitel 1278