May 28, 2026 - 03:29 PM -
0
ஜோதிடத்தில் முழு சுபர் என அழைக்கப்படும் குரு பகவான் மிதுனத்திலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி நடக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி மே 26 ஆம் திகதியும் (வைகாசி 12), திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜூன் 2 ஆம் திகதியும் (வைகாசி 19) அன்று இந்த பெயர்ச்சி நடப்பதாக ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். குருவின் இந்த நகர்வால் அதிர்ஷ்டமான மற்றும் கவனமுடன் இருக்க வேண்டிய ராசியினர் யார், அவர்களுக்கான ஒருவரி பலன்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
மேஷம் ராசி
குரு உங்கள் ராசிக்கு 4 ஆம் இடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.
குருப் பெயர்ச்சி தரும் பலன்கள் - குருவின் அமைப்பு உங்களுடைய ராசிக்கு சுகஸ்தானத்தில் இருப்பது உங்களுக்கு தொழில் முன்னேற்றம் மற்றும் நிதிநிலை உயரும் வாய்ப்புகள் அதிகம். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை மற்றும் தொழில் தொடர்பாக இருந்து தடைகள் விலகும். சொத்துக்கள் சேரலாம்.
பரிகாரம் - வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு வழிபாடு செய்யவும். குருவின் மந்திரம்: “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஸ: குரவே நம:” – 108 முறை ஜெபியுங்கள். பலன் சதவீதம் - 65/100.
ரிஷபம் ராசி
குரு உங்கள் ராசிக்கு 3 ஆம் இடமான தைரிய, வீரிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.
குருப்பெயர்ச்சி தரும் பலன்கள் ⇒ பெரிய அளவில் சாதகமான பலன்கள் கிடைக்காது. கல்வி, வேலை வாய்ப்பு, வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் சாதகமான பலனை தரலாம். பணம் வரவும் மேம்படும். தைரியமான நடவடிக்கை கடின சூழ்நிலை சாதகமாக மாற்றும்.
பரிகாரம் - வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு செய்யவும். ஆலங்குடியில் இருந்து திருச்செந்தூர் ஆலயம் சென்று வருவது நல்லது. பலன் சதவீதம் - 75/100.
மிதுனம் ராசி
குரு உங்கள் ராசிக்கு 2 ஆம் இடமான குடும்ப, தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.
குருப்பெயர்ச்சி தரும் பலன்கள் ⇒ உங்கள் ராசிக்கு தன குருவாக அமைவதால், உங்களுடைய பொருளாதாரங்களை முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கும் உறவுகள் மேம்படும். வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கடன் தொல்லை தீரும். தொழில் விரிவடையும்.
பரிகாரம் - வேலைகளுக்கு உணவு தானம் செய்யவும்.பலன் சதவீதம் - 95/100.
கடகம் ராசி
குரு உங்கள் ராசிக்கு 1 ஆம் இடமான லக்ன ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.
குருப்பெயர்ச்சி தரும் பலன்கள் - குரு பகவான் உங்களுடைய ஆசைகளை அமர்வதால், உங்களுக்கு எதிலும் புதிய தொடக்கமாக அமையும். திருமணம், குழந்தை பேறு என மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும். கூட்டுத்தொழில் மற்றும் குடும்ப உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் தன வரவு காரணமாக கோடீஸ்வர யோகம் உங்களை சேரும்.
பரிகாரம் - குருவாயூர் கோயில் சென்று வழிபட செய்வது நல்லது. பலன் சதவீதம் - 80/100.
சிம்மம் ராசி
குரு உங்கள் ராசிக்கு 12 ஆம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.
குருப்பெயர்ச்சி தரும் பலன்கள் - சிம்ம ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், இந்த காலத்தில் உங்களுடைய செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. பொருளாதாரத்தில் சிக்கனத்தை கடைபிடிக்கவும். செலவுகளை சுப செல்களாக மாற்றிக் கொள்வது நல்லது. கடன் வாங்காமல் இருப்பது நல்லது.
பரிகாரம் - திருப்பதி, குருவாயூர் ஆலயங்களுக்கு யாத்திரை செல்வது நல்லது. பலன் சதவீதம் - 55/100.
கன்னி ராசி
குரு உங்கள் ராசிக்கு 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.
குருப்பெயர்ச்சி தரும் பலன்கள் - குருவின் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமைவதால், நீங்கள் எடுக்கக்கூடிய தொழில், வேலை தொடர்பான முயற்சிகளில் லாபம் அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பாக நல்ல பலன்கள் கிடைக்கும். சிலருக்கு தங்களுடைய உத்தியோகம் தொடர்பாக பதவி சம்பள உயர்வு கிடைக்கும்.
பரிகாரம் - குரு அருள் கிடைக்க கூடிய ஆலங்குடி கோவிலுக்கு சென்று வருவது நல்லது. அன்னதானம் செய்யவும். பலன் சதவீதம் - 93/100.
துலாம் ராசி
குரு உங்கள் ராசிக்கு 10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.
குருப்பெயர்ச்சி தரும் பலன்கள் - இந்த செயல் செய்தாலும் அதில் மிதமான பலன்களை உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வேலையை அர்ப்பணிப்புடன் செய்தார் பெருமையும், மரியாதையும் கிடைக்கும். சிலருக்கு பதவி தொடர்பாக இடர்பாடுகள் ஏற்படலாம். கடின உழைப்பு தேவைப்படும்.
உங்களுக்குப் பலவிதத்தில் நன்மைகள் கிடைக்கக்கூடிய காலம். உங்களின் முயற்சிகளுக்கு நற்பலன் கிடைக்கும்.
பரிகாரம் - பசு மாட்டிற்கு வாழைப்பழம், கீரை கொடுத்து வழிபாடு செய்யவும். வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு செய்யவும். பலன் சதவீதம் - 58/100.
விருச்சிகம் ராசி
குரு உங்கள் ராசிக்கு 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.
குருப்பெயர்ச்சி தரும் பலன்கள் - பலவிதத்தில் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். குருவின் ஐந்தாம் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் எதிலும் முன்னேற்றம் ஏற்படும். மன நிம்மதி கிடைக்கும். நிதிநிலை மேம்படும். தடைப்பட்டு வந்த பதவி உங்களுக்கு கிடைக்கலாம்.
பரிகாரம் - ஏழை மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக உதவலாம். வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது. பலன் சதவீதம் ⇒ 90/100.
தனுசு ராசி
குரு உங்கள் ராசிக்கு 8ம் இடமான ஆயுள், அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். மிக கவனமாக இருக்க வேண்டிய காலம்.
குருப்பெயர்ச்சி தரும் பலன்கள் - மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம். பொருளாதார நிலையை மேம்படும் என்றாலும், செலவுகள் அதிகரிக்கும். பயணங்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். தேவையற்ற அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
பரிகாரம் - ஆலங்குடி, திருச்செந்தூர் போன்ற குரு அருள் கிடைக்கும் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது. பலன் சதவீதம் - 48/100.
மகரம் ராசி
குரு உங்கள் ராசிக்கு 7 ஆம் இடமான துணை, தொழில் கூட்டாளி ஸ்தானமான களத்திர குருவாக சஞ்சரிப்பார்.
குருப்பெயர்ச்சி தரும் பலன்கள் - குருவின் நேரடி பார்வை உங்கள் ராசி மீது விழுவதால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தாம்பத்தியம் மேம்படும். திருமணம் முயற்சி கைகூடும். தொழில் கூட்டாளிகளுடன் உறவு மேம்படும். அவர்களின் ஆலோசனை உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் சாத்தியப்படும்.
பரிகாரம் - தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கவும். வியாழக்கிழமைகளில் ஒரு வழிபாடு செய்யவும். பலன் சதவீதம் - 88/100.
கும்பம் ராசி
குரு உங்கள் ராசிக்கு 6 ஆம் இடமான நோய், கடன் ஸ்தானத்தில் ரோக குருவாக சஞ்சரிப்பார்.
குருப்பெயர்ச்சி தரும் பலன்கள் - குருவின் அமைப்பு காரணமாக உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். குருவின் அருளால் உங்களுக்கு தொந்தரவு தந்து வந்த நோய் தீவிர வாய்ப்பு உண்டு. கடன் பிரச்சனைகள் குறையும். இருப்பினும் பொருளாதார ரீதியாக மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பணியிடத்திலே எதிரிகளின் தொல்லை விலகும். எதிலும் கடின உழைப்பு தேவைப்படும்.
பரிகாரம் - குருவாயூரப்பன் சகஸ்ரநாமம் படியுங்கள். பலன் சதவீதம் - 55/100
மீனம் ராசி
குரு உங்கள் ராசிக்கு 5 ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அதிர்ஷ்ட குருவாக சஞ்சரிப்பார்.
குருப்பெயர்ச்சி தரும் பலன்கள் - மிகச் சிறந்த காலமாக இருக்கும். உங்களுடைய புத்திர ஸ்தானத்தில் குருவின் அமைவது, பிள்ளைகள் தொடர்பாக நல்ல முன்னேற்றம் இருக்கும். அவர்களின் கல்வி மற்றும் புத்திசாலித்தனம் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் கலைத்திறமை, படைப்பாற்றல் மேம்படும். பங்கு சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை தரும்.
பரிகாரம் - சரஸ்வதி தேவி வழிபாடு செய்வது நல்லது. பலன் சதவீதம் - 91/100.

