Sep 21, 2026 - 09:24 AM -
0

இன்று (21) சந்திர பகவான்மகர ராசியின் பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று மரண யோகம் உள்ள தினத்தில் மேஷம், ரிஷப ராசியை சேர்ந்த ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். இன்று குரு - செவ்வாய் சேர்க்கை நீச பங்க ராஜயோகத்தை தரக்கூடிய தினத்தில் 12 ராசிகளுக்கு நன்மைகள் அதிகம் நடக்கும்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று காதல் உறவில் வாக்குவாதங்கள், விவாதங்களை தவிர்க்கவும். இன்று நீங்கள் சில உல்லாச பயணத்தை அனுபவிப்பீர்கள். உங்களுக்கு பிடித்தமான சில பணிகளை செய்ய முயற்சிப்பீர்கள். இந்த மனதளவில் சுறுசுறுப்பாக உணர்வு ஏற்படும். இன்று முதுகு தொடர்பான வலி, தொந்தரவுகள் ஏற்படலாம். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகள் உங்களுக்கு முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். செலவினங்களை சரியாக கவனித்தால் உங்களுடைய நிதிநிலை தானாக முன்னேற்றம் அடையும். இது உங்கள் வீட்டில் நிதி அழுத்தத்தை குறைக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வருவாயை கணக்கிடுவதோடு, சேமிப்பதற்கான திட்டங்களிலும் கவனம் செலுத்தவும். இன்று புதிய தொழில் ஒப்பந்தங்கள் தொடர்பாக அவசரப்பட வேண்டாம். அதேபோல சொத்து வாங்குவது, முதலீடு தொடர்பாக நிதானம் தேவை. ஆவணங்களை சரி பார்க்கவும். சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். இன்று யாருக்கும் உறுதிமொழி கொடுக்க வேண்டாம். உடல் நலனில் கவனம் தேவை. உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும்.குடும்பத்திற்காக நேரம் செலவிட முயற்சிக்கவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டிய நாள். இன்று நிதானமான அணுகு முறையில் திட்டமிடமும் உங்கள் வேலையை வேகமாக முடிக்க உதவும். இலக்குகளை நிர்ணயத்தை செயல்பட வேண்டிய நாள். சிலருக்கு செரிமானம் தொடர்பான தொந்தரவுகள் ஏற்படும். செரிமானத்திற்கு இலகுவான உணவுகளை எடுத்துக் கொள்ளவும். காதல் தொடர்பாக வாக்குவாதங்கள் நிறைந்ததாக இருக்கும். இன்று உங்கள் பேச்சில் நிதானம், செயலில் கவனம் தேவைப்படும். உடலுக்கு தேவையான அளவு ஓய்வு கொடுக்க தவறாதீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று இன்று கடின உழைப்பு தேவைப்படும். உடல் சோர்வாக இருக்கும். உங்கள் குடும்பத்திலும், பணியிடத்திலும் பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து செயல்படவும். விரிவான திட்டமிடலுடன் செயல்படுவது உங்கள் முன்னேற்றத்திற்கு உகந்ததாக இருக்கும். இன்று சுவாசம் தொடர்பாக சிறிய தொந்தரவுகள் ஏற்படும். மன அழுத்தத்தை குறைக்கவும், உடல் நலனை மேம்படுத்தும் விதமாக யோகா, சிறிய அளவிலான உடற்பயிற்சிகள் செய்ய தவறாதீர்கள். ஆக்கப்பூர்வமான சமூகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். வேலை, தொழில் தொடர்பாக பயணங்கள் சாத்தியப்படும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை, தொழில் தொடர்பான சிந்தனை மிக்க செயல்பாடு உங்களுக்கு அங்கீகாரத்தை பெற்று தரும். புதிய வாய்ப்புகள் அல்லது ஒப்பந்தங்களை பெறுவதில் அவசரப்பட வேண்டாம். உங்கள் உணர்வை மேம்படுத்துவதில் இனிய பேச்சு உதவியாக இருக்கும். வண்டி வாகனம் இயக்குவதில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய நாள். இன்று வாகனம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கலாம். தனிமையில் இருப்பவர்களுக்கு காதல் துணை கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று உங்கள் உடலுக்கு தேவையான ஓய்வு கொடுக்கவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தின் பொருளாதரங்களையும் மேம்படுத்தும் விதமாக நீண்டகால சேமிப்பு திட்டங்களில் கவனம் செலுத்தவும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இன்று காதல் உறவில் அன்பான உரையாடல் உங்களுக்கிடையே நம்பிக்கையை வலுப்படுத்தும். காதலன் நம்பிக்கையூட்டும் பொறுமையான அணுகுமுறை குடும்ப உறவை பலப்படுத்தும். இன்று உடல் ரீதியாக புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். அதிக நேரம் செல்போன் திரையை பயன்படுத்துவதை தவிர்க்கவும். உங்கள் ராசியில் புதன் சூரியனின் சேர்க்கை நிதி நிலையை திறம்பட நிர்வகிக்க உதவும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சுக்கிரனின் ஆட்சி உங்களுடைய நிதி நிலையையும், குடும்ப உறவையும் மேம்படுத்த கூடியதாக இருக்கும். சிலருடன் சேர்ந்து செய்யக் கூடிய பணிகள் வேகமடையும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் கவனமாக செயல்படவும். ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். இன்று உங்களுடைய இனிமையான பேச்சு குடும்பத்திலும், காதல் விஷயத்திலும் பெரிதலை ஏற்படுத்தும். கூட்டாளிகளுடன் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் நிவர்த்தி ஆகும். நல்லுறவு மேம்படும். இன்று ஆற்றல் நிறைந்தவராக இருப்பீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று உங்கள் உடல் நலனை பேணுவதிலும், உடற்பயிற்சி செய்வது, சரியான அளவு ஓய்வு எடுக்க தவறாதீர்கள். இன்று மன அழுத்தத்தை தரக்கூடிய எந்த ஒரு விவாதத்திலும் ஈடுபட வேண்டாம். இன்று மறைமுக செலவுகளை கவனிப்பது உங்கள் நிதி நிலைக்கு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு செல்லும். உங்களுடைய வேலை தொடர்பான விதிமுறைகளை மற்றும் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும். இன்று நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதில் கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளுடன் புரிதல் அதிகரிக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நிதிநிலை மற்றும் வேலை தொடர்பாக நம்பிக்கை அதிகரிக்க கூடிய நாள். அதிக வருமானம் ஈட்டவும், புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடிய நாள். உற்சாகமாக மனநிலையுடன் இருப்பீர்கள். எந்த ஒரு இடத்தில் முதலீடு செய்வதற்கு முன், அதன் விவரங்களை முழுமையாக தெரிந்து செயல்படவும். இன்று உங்கள் வேலையை முடிக்க கூடுதல் முயற்சி தேவைப்படும். புதிய தொடர்பு நன்மை தரும். உங்கள் மனதில் தன்னம்பிக்கையை உணர்ந்து நிறைந்ததாக இருக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் மேற்கொள்ளக்கூடிய வேலை, பயணங்கள் அனுகூல பலனை தரும். கல்வி, போட்டி தேர்வு போன்ற விஷயங்களில் சிறப்பாக செயல்படுவீர்கள். குரு அருள் நிறைந்த நாள். முதலீடு, செலவு போன்ற நிதி சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். தற்காலிக நெருக்கடிகளை சமாளிக்க, உங்கள் இலக்குகளில் இருந்து தவற வேண்டாம். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை கவனமாக முடிக்கவும். இன்று உங்களுடைய நேர்மறையான மற்றும் நேர்மையான செயல்பாடு பிறரிடம் பாராட்டை பெற்று தரும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் வேலையை வேகமாக முடிக்கவும், நிதி நிலையில் சாதக பலனை பெறவும் உதவும். புதிய முதலீடு சார்ந்த திட்டங்களில் அவசரப்பட வேண்டாம். இன்று அதிக அபாயம் உள்ள வேலையை செய்வது மற்றும் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும். சக ஊழியர்களிடம் இருந்து சிந்தனை மாறுபாடு ஏற்படும். தொழில்நுட்பம் தொடர்பான புதிய திறன்களை கற்றுக் கொள்ள விருப்பப்படுவீர்கள். பழைய முறைகளை ஒதுக்கி புதிய வழிகளில் உங்கள் செயல்களை செய்ய நினைப்பீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய பொறுப்புணர்வு மிக்க செயல்பாடு நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க உதவும். செலவுகள் கட்டுப்படுத்துவதோடு, பிறக்கு வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். சிக்கலில் இருந்து தப்பிக்க அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். கடந்த கால உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். இது புதிய வேலை மற்றும் திட்டங்களை முன் நோக்கி எடுத்துச் செல்ல உத்வேகமாக இருக்கும். உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பாக சிறிய தாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு.. குடும்ப உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவும்.






































