Oct 14, 2026 - 03:07 PM

தெலுங்கு சினிமாவில் Natural Star என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகர் நானி.
முன்னணி நாயகனாக தெலுங்கில் வலம் வந்தவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நான் ஈ படத்தின் மூலம் மிகவும் பரீட்சயமானார். அடுத்தடுத்து தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான படங்களுக்கும் நல்ல வெற்றி கிடைத்து வந்தது.
கடைசியாக நானி, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் என்ற படத்தில் நடித்தார். உலகம் முழுவதும் அப்படம் கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி வெளியாகி இருந்தது. முதல் நாளில் 88 கோடி ரூபா வரை வசூல் வேட்டை நடத்திய இப்படம் அடுத்தடுத்து வசூலில் சொதப்பியது.
இந்த நிலையில் நடிகர் நானியின் அடுத்தப்பட கூட்டணி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதாவது நடிகர் நானி, தமிழ் சினிமாவின் 96, மெய்யழகன் பட புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வருகிறது. அதோடு இப்படத்தில் நாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

































