Oct 14, 2026 - 04:07 PM

கொழும்புக்கும் Ho Chi Minh City ம் இடையே விமானச் சேவைகளை
முன்னெடுக்கும் Vietjet, வியட்நாமின் ஹனோய் நகரத்தை கசகஸ்தானின் அல்மாட்டி மற்றும் செக்
குடியரசின் பிராக் ஆகிய நகரங்களுடனும், அல்மாட்டியை பிராக் நகரத்துடனும் இணைக்கும் புதிய
சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இது நிறுவனத்தின் கண்டங்களுக்கு
இடையிலான வலையமைப்பை விரிவுபடுத்துவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளான அதன்
பிரவேசத்தையும் குறிக்கின்றது. இப்புதிய விமான சேவைகள், ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு
இடையே சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களை மேம்படுத்துவதுடன், மிகவும்
மலிவான பயணத் தெரிவுகளையும் வழங்குகின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில், இந்நியமனப் புதிய பாதைகள், கொழும்பை மையமாகக்
கொண்டு Vietjet நிறுவனம் கட்டியெழுப்பி வரும் வலையமைப்பை மேலும் விரிவுபடுத்துகின்றன.
இந்நிறுவனம் கொழும்புக்கும் Ho Chi Minh City இடையிலான நேரடி விமானச் சேவைகளை 2026
ஆகஸ்ட் முதல் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று முறை இயக்கி
வருகின்றது. அதேவேளை கொழும்பு ஊடாக இயங்கவுள்ள புதிய Ho Chi Minh City - மாலைதீவு
சேவை, 2026 டிசம்பர் 5 முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ஹனோய் நகரம்
மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கப்பட்டுள்ளதால், Vietjet இன் பரந்த
வலையமைப்பின் மூலம் இலங்கைப் பயணிகள் பயணிக்கக்கூடிய இடங்களுக்கான தெரிவுகள்
மேலும் அதிகரித்துள்ளன.
இச்சேவைகளின் ஆரம்ப விழா நிகழ்வுகள் ஒக்டோபர் 10 ஆம் திகதியன்று அல்மாட்டி சர்வதேச
விமான நிலையத்திலும், பிராக் வாக்லாவ் ஹாவல் விமான நிலையத்திலும் உள்ளூர் தலைவர்கள்,
பொதுமக்கள் மற்றும் பயணிகளின் அமோக வரவேற்புக்கு மத்தியில் நடைபெற்றன. முதல்
விமானங்கள் பாரம்பரிய நீர் தாரை வார்த்து, உள்ளூர் கலாசாரப் பாரம்பரியங்களைப்
பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்கப்பட்டன. இது மூன்று பிராந்தியங்களையும்
இணைக்கும் புதிய பயணங்களின் தொடக்கத்தைக் குறித்ததுடன், சர்வதேச பயணிகளை
வியட்நாமிற்கு வரவேற்பதாகவும் அமைந்தது. மேலும், ஆரம்பக் கட்ட விமானங்களில் பயணித்த
பயணிகள் Vietjet நிறுவனம் மற்றும் விமான நிலையங்களிடமிருந்து விசேட நினைவளிப்புகளைப்
பெற்றுக்கொண்டதுடன், இது அவர்களின் பயணங்களுக்கு மற்றுமொரு சிறப்பம்சமாகச் சேர்ந்தது.
இந்த விமானச் சேவைகள், நவீன எயார்பஸ் A330 Wide-body விமானங்களைப் பயன்படுத்தி,
செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வாரத்திற்கு இருமுறை இருவழிச் சேவைகளாக
இயக்கப்படுகின்றன. பயணிகள் சிறந்த விருந்தோம்பல், பல்வகைப்பட்ட உணவுத் தெரிவுகள்
மற்றும் மேம்படுத்தப்பட்ட பயண அனுபவத்தைக் கொண்ட Business மற்றும் SkyBoss
சேவைகளைத் தெரிவு செய்துகொள்ள முடியும். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, வியட்நாமிய
குடிமக்கள் கசகஸ்தானிற்கு 30 நாட்கள் வரை விசா இன்றி விஜயம் செய்ய முடியும்.
செக் குடியரசின் தலைநகரான பிராக், அதன் Gothic, Baroque மற்றும் Art Nouveau கட்டிடக்கலை
அம்சங்களினாலும், வரலாற்றுச் சிறப்புமிக்க சதுக்கங்களினாலும், நூற்றாண்டுகளாகப்
பேணப்பட்டு வரும் கலாசாரப் பாரம்பரியத்தினாலும் பயணிகளைக் கவரக்கூடியது.
கசகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டி, அதன் கண்கவர் இயற்கை நிலப்பரப்புகளுக்கும்,
பல்வகைப்பட்ட கலாசாரத்திற்கும், மத்திய ஆசியாவில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த
அமைவிடத்திற்கும் பெயர் பெற்றது. அத்துடன், வியட்நாமின் தலைநகரான ஹனோய்,
வியட்நாமிய கலாசாரத்தை வெளிப்படுத்தும் தனித்துவமான அனுபவத்தை வழங்குவதுடன்,
வியட்நாமின் புகழ்பெற்ற கலாசார, வரலாற்று மற்றும் இயற்கை பாரம்பரியங்களைக்
கண்டறிவதற்கான நுழைவாயிலாகவும் சர்வதேச பயணிகளுக்குத் திகழ்கின்றது.
Vietjet பிரதம நிறைவேற்று அதிகாரி என்குயென் தான்ஹ் சன் கருத்துத் தெரிவிக்கையில், “எமது
சர்வதேச வலையமைப்பு விரிவாக்கத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை இந்த புதிய விமானச்
சேவை வழித்தடங்களின் அறிமுகம் குறிக்கின்றது. ஐரோப்பாவிற்கான தனது சேவைகளை Vietjet
தொடர்ந்து விரிவுபடுத்துவதுடன், ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் ஆசியா ஆகிய
பிராந்தியங்களுக்கு இடையேயான பயணங்களை மேலும் இலகுவானதாக மாற்றவுள்ளது.
வியட்நாமிற்கு வருகை தரும் பயணிகளை வரவேற்பதுடன், கலாசாரம், பாரம்பரியம் மற்றும்
தனித்துவமான அனுபவங்கள் நிறைந்த உலகளாவிய இடங்களுக்கு வியட்நாமிய மற்றும் சர்வதேச
பயணிகளைக் கொண்டு சேர்ப்பதற்கும், வர்த்தகம் மற்றும் முதலீடுகளின் வளர்ச்சியை
ஆதரிப்பதற்கும் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
ஒவ்வொரு Vietjet விமானப் பயணத்தின்போதும், பயணிகள் Pho, Banh mi மற்றும் வியட்நாமிய
iced milk coffee உட்படப் புதிதாகத் தயாரிக்கப்பட்ட வியட்நாமிய மற்றும் சர்வதேச சிறப்பு
உணவுகளை சுவைக்க முடியும். நவீன, எரிபொருள் திறனுள்ள விமானங்களில் Vietjet இன்
தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்புள்ள பணிப்பெண்கள் மற்றும் பணியாளர்களால் இவை
வழங்கப்படுகின்றன. மேலும், 10,000 மீற்றர் உயரத்தில் கலை மற்றும் கலாசார அனுபவங்களை
வான்வழியில் வழங்கி, ஒவ்வொரு பயணத்திற்கும் Vietjet ஒரு தனித்துவமான சிறப்பைச்
சேர்க்கின்றது.
* விமான சேவை நேர அட்டவணை (உள்ளுர் நேரம்)
* VJ031: ஹனொய் (HAN) 08:25 முதல் அல்மாட்டி (ALA) 12:50 / அல்மாட்டி (ALA) 14:20 முதல்
பிராக் (PRG) 18:55
* VJ032: பிராக் (PRG) 20:55 முதல் அல்மாட்டி (ALA) 06:40 (+1) / அல்மாட்டி (ALA) 08:10 முதல்
ஹனொய் (HAN) 16:20
அல்மாட்டி ஊடாக இணைப்பு நேரம் சுமார் 90 நிமிடங்கள்.
Vietjet பற்றி:
புதுயுக விமானச் சேவை நிறுவனமான Vietjet, வியட்நாமின் வான்வழித் துறையில் புரட்சியை
ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் ஒரு முன்னோடி விமானச்
சேவையாகத் திகழ்ந்து வருகின்றது. செலவின முகாமைத்துவத் திறன், பயனுள்ள செயல்பாடுகள் மற்றும்
செயற்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், அனைத்து நடவடிக்கைகளிலும் அதிநவீன
தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய போக்குகளுக்குத் தலைமை வகிக்கும் Vietjet, வாடிக்கையாளர்களின்
தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலதரப்பட்ட சேவைகளுடன் கூடிய கட்டணச் சேமிப்பு மற்றும்
நெகிழ்வுத்தன்மை மிக்க வான்வழிப் பயண வாய்ப்புகளை வழங்குகின்றது.
Vietjet நிறுவனம், சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) செயற்பாட்டு பாதுகாப்பு
கணக்காய்வு (IOSA) சான்றிதழைப் பெற்ற ஒரு முழு அளவிலான அங்கத்துவ நிறுவனமாகும். வியட்நாமின்
மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இதற்கு, உலகின் ஒரே ஒரு பாதுகாப்பு மற்றும்
தயாரிப்பு மதிப்பீட்டு இணையத்தளமான airlineratings.com நிறுவனத்தினால் பாதுகாப்பிற்கான மிக
உயர்ந்த 7 நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், Airfinance Journal இனால் தொடர்ந்து பல
வருடங்களாக ஆரோக்கியமான நிதிநிலை மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட உலகின் சிறந்த 50
விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், Skytrax, CAPA, Airline
Ratings போன்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளினால் உலகின் சிறந்த குறைந்த கட்டண விமானச்
சேவை நிறுவனம் எனவும் Vietjet பலமுறை பெயரிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.vietjetair.com
































