Oct 14, 2026 - 03:53 PM

ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம், பெரிய புரோமோஷன்கள் இல்லாமல் நாளை (15) வெளியீடாகிறது.
அனிருத் தனது பதிவில் ரஜினியின் மாயாஜாலத்தையும், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் புகழ்ந்துள்ளார். பல பிரபலங்கள் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக கூறப்படும் இப்படம், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஜெயிலர் 2. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான 'ஜெயிலர்' படத்தின் இரண்டாவது பாகமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ரஜினி உடன் சேர்ந்து எஸ் ஜே சூர்யா, ரம்யா கிருஷ்ணன், சுராஜ், வித்யாபாலன் என பல திரைநட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நாளை அக்டோபர் 15 ஆம் திகதி படம் வெளியாகவிருக்கும் நிலையில், படம் எந்தவிதமான பெரிய புரோமோஷனும் இல்லாமல் வெளியாகவிருக்கிறது. ட்ரெய்லரிலும் பெரியதாக எதையும் ரிவீல் செய்யாமல் இயல்பான கதைப்போலவே காட்டப்பட்டுள்ளது.
ஆனால் படத்தில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி போன்றவர்கள் எல்லாம் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. படக்குழு அதைப்பற்றி எதையும் வெளிப்படுத்தவில்லை. மாறாக கடைசிநேரத்தில் ஷாருக்கான் நடித்திருப்பதாகவும், காமெடி நடிகர் சந்தானம் நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இப்படி பெரிய புரொமோஷன் இல்லாமலேயே படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், நாளை படத்தை திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் படம் வெளியீட்டுக்கு முன்னதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் இசையமைப்பாளர் அனிருத், “தலைமுறை தலைமுறையாக, மகிழ்ச்சியையும், சிரிப்பையும், மெய்சிலிர்ப்பையும். வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் நினைவுகளையும் ரஜினிகாந்த் நமக்கு தந்துள்ளார்.
தன்னுடைய 76 வயதிலும், கடந்த 51 ஆண்டுகளாக, இன்றும் மாயாஜாலங்களை நிகழ்த்தி, வரலாற்றை மாற்றி எழுதுகிறார் நாளை, மீண்டும் 172 ஆவது முறையாக, விளக்குகள் மங்கும். திரைகள் ஒளிரும். உங்கள் அனைவரின் வாழ்த்துகளுடன். ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் வாழும் ஒரு மனிதருக்கான அன்பை இந்த உலகம் காணும் என்று நம்புகிறோம்.
ஒரே சூரியன்.. ஒரே சந்திரன்.. ஒரே சூப்பர்ஸ்டார்" என பதிவிட்டுள்ளார்.
































