Oct 16, 2026 - 02:01 PM

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, அரச உளவுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று (16) நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ள அவரை, அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
































