Oct 18, 2026 - 01:02 PM

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்கும் குருணாகல், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தலொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இதற்கமைய, குறித்த பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடையே இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இன்று (18) முற்பகல் 11.30 க்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், நாளை (19) அதிகாலை ஒரு மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அசம்பாவிதங்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.
































