Oct 18, 2026 - 01:14 PM

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாணயச்சுழற்சியில் (Toss) வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், இலங்கை அணியை குசல் மெண்டிஸும், பாகிஸ்தான் அணியை தலைவராக ஷஹீன் அப்ரிடியும் வழிநடத்துகின்றனர்.
இலங்கை அணி தனது பந்துவீச்சுப் பலத்தை அதிகரிக்கும் வகையில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு வேகப்பந்து வீச்சு சகலதுறை ஆட்டக்காரர் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்கியுள்ளது.
அதேவேளை, பாகிஸ்தான் அணியில் சாத் பெய்க் (Saad Baig) தனது முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.
மேலும், சிரேஷ்ட வீரர் பாபர் அசாம் மீண்டும் பாகிஸ்தான் அணியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
































