Oct 18, 2026 - 12:18 PM

நாடு முழுவதும் நேற்று (17) பதிவான திடீர் மின் தடை தொடர்பில் முறையான விசாரணை ஒன்று நடத்தப்படும் என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் தனியார் நிறுவனம் (National System Operator) தெரிவித்துள்ளது.
குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அது தொடர்பான அறிக்கை ஒரு மாதத்திற்குள் பொதுப் பயன்பாடுகள் ஆணையக்குழுவுக்கும் (PUCSL) அமைச்சுக்கும் சமர்ப்பிக்கப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் பிரதீப் பிரியதர்சன தெரிவித்தார்.
அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கான அவசியமான நடவடிக்கைகளை குறித்த அறிக்கையின் ஊடாகப் பரிந்துரைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக 'அததெரண' மேற்கொண்ட வினவலின் போது அவர் மேலும் குறிப்பிட்டார்.
































