Oct 20, 2026 - 07:26 PM

ஹாரிஸ்பத்துவ பூஜாபிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பராமரிப்புப் பணி காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, நாளை 21 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 09.00 மணி முதல் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 03.00 மணி வரை 42 மணிநேர காலப்பகுதிக்கு இந்த நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படும்.
மெதவெல (பழைய) சேவை நீர்த்தேக்கம்: கெவும்கோஹே வீதி, கோணிகொட, ஜயந்தி வீதி, குருஹேவே, பல்கும்புர, இடமேகம, அரம்பேகம, கொரொக்கஸ் அங்க வீதி, எளமல் பத, கோட்டுத்தென்ன, பெதியாகொடவத்த, களுவான, போதொட்ட, ஹரங்கஹதன்ன, தொடங்கஹதென்ன, கும்புகேதர, தெம்பரலொவ, திப்புட்ட மற்றும் தலபெலெல்லேகொட வீதி.
மெதவெல (புதிய) சேவை நீர்த்தேக்கம்: படுகொட, எஹெஅலகஸ்ஹின்ன, தித்தேனிய, ஓவிஸ்ஸ, வடகொட, தொம்பகம்மன, ஹேதெனிய, சூரியகும்புர, அம்பருப்ப, ஹரன்கஹட, பொக்காவல, வலதன்ன மற்றும் பதிராதா.
கல்லெனவத்த பகுதி: கல்லெனவத்த மற்றும் பார்ன் அங்க.
கலகெதர பகுதி: கலகெதர, வேமட, போயகொட சார்ந்த பகுதிகள், ரம்புக்கனை வீதி, பொஹோலியத்த வீதி மற்றும் குருணாகல் வீதி.
மாவத்தகம பகுதி: மாவத்தகம, பரந்தன வீதி, ரம்புக்கனை வீதி, பரகஹதெனிய, யடிவில்ல, மில்லவ மற்றும் பிலெஸ்ஸ.
நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன், இக்காலப்பகுதியில் சேமித்து வைக்கும் நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நுகர்வோரைக் கேட்டுக்கொள்கிறது.
































