Nov 6, 2026 - 08:26 PM

இன்று (6) பிற்பகல் வேளையில் பலத்த மழை காரணமாக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகளில் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இதற்கமைய பொரளை, மருதானை, பம்பலப்பிட்டி மற்றும் ஆமர் வீதி உள்ளிட்ட கொழும்பு நகரின் பல பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், அவ்வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற வானிலை மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையைக் கருத்தில் கொண்டு, இயன்றவரை அவதானத்துடன் செயற்படுமாறும், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
































