Nov 11, 2026 - 10:05 PM

பதுளை - பண்டாரவளை பிரதான வீதி மீண்டும் வாகன போக்குவரத்துக்காக சற்றுமுன்னர் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
ஹாலிஎல - உடுவரை 6 ஆம் மைல்கல் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, இந்த வீதியில் இன்று (11) மாலை போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன், அனர்த்த முகாமைத்துவ நிலையம் இணைந்து மண்மேடை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதனடிப்படையில் பதுளை - பண்டாரவளை வீதியில் வாகன போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
































