Nov 11, 2026 - 07:03 PM

பரஸ்பர வியாபார கைகோர்ப்பை மேம்படுத்துவதில் நிறுவனத்தின் பங்கினை நிறைவேற்றுக் குழுவின் பிரதிநிதித்துவம் வலிமைப்படுத்தியுள்ளது
இலங்கை – அமெரிக்கா இடையிலான வியாபார உறவுகளை வலிமைப்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை SLT-MOBITEL மீள உறுதி செய்துள்ளது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இலங்கை – அமெரிக்க வியாபார சம்மேளனம் (SLUSABC) இன் கைகோர்த்து, பரஸ்பர வியாபார ஈடுபாட்டை மேம்படுத்துவதில் ஒரு தசாப்த கால பூர்த்திக் கொண்டாட்டத்தில் இணைந்திருந்தது. அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சம்மேளனத்தின் வருடாந்தப் பொது ஒன்றுகூடலின் போது 10ஆவது வருட பூர்த்தியை கொண்டாடியது. நிகழ்வின் வெள்ளி அனுசரணையாளராக SLT-MOBITEL கைகோர்த்து இந்த மைல்கல் நிகழ்வுக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது.
நிறுவனத்தின் சார்பாக இந்த வருடாந்த பொது ஒன்றுகூடலில், பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ரோஹன எல்லாவல மற்றும் சர்வதேச வணிக பிரதி பொது முகாமையாளர் தனுஷ்க மெதகம ஆகியோர் பங்கேற்றிருந்தனர். சம்மேளனத்துடன் SLT-MOBITEL இன் தொடர்ச்சியான ஈடுபாட்டுக்கு மேலதிகமாக, அதன் நிறைவேற்றுக் குழுவின் அங்கத்தவராக தனுஷ்க மெதகம தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதனூடாக இலங்கை மற்றும் அமெரிக்கா இடையே வலிமையான வியாபாரத் தொடர்புகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு நிறுவனத்தின் ஆதரவு மீள உறுதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மெயர் கலந்து கொண்டதுடன், வியாபார சமூகம், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அங்கத்துவ அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 22ஆவது வணிக சம்மேளனத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள SLUSABC, வியாபார ஈடுபாடுகளுக்கு ஆதரவளித்தல், பங்காண்மைகளை ஊக்குவித்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான கைகோர்ப்புகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தல் போன்ற முக்கியமான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.
இந்த சம்மேளனத்தில் பங்கேற்பது என்பது SLT-MOBITEL ஐ பொறுத்தமட்டில், கூட்டாண்மை பிரதிநிதித்துவத்துக்கு அப்பாற்பட்டதுடன், அமெரிக்க வணிக சமூகத்துடன் ஈடுபாட்டை பேணுவதற்கான அடித்தளத்தை வழங்கி, சர்வதேச வலையமைப்புகளை வலிமைப்படுத்தி, சர்வதேச வியாபார எதிர்பார்ப்புகளுடன் பொருந்தும் வாய்ப்புகளை கண்டறியவும் வாய்ப்பளிக்கின்றது. டிஜிட்டல் இணைப்பு மற்றும் தொழில்னுட்பம் தொடர்ந்தும் சர்வதேச வணிகத்தை மேம்படுத்தி வரும் நிலையில், இவ்வாறான பங்காண்மைகளினூடாக, வணிகம், முதலீடுகள் மற்றும் தொழில்னுட்ப-சார் பொருளாதார விருத்தி போன்றவற்றுக்கு வழிகோலும் கைகோர்ப்புகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
இலங்கையின் தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனர் எனும் வகையில், சர்வதேசப் பங்காண்மைகளை வலிமைப்படுத்துவதிலும், டிஜிட்டல் இணைப்புத்திறனை மேம்படுத்துவது, பெருமளவு இணைக்கப்பட்ட வியாபார சூழலுக்கு பங்களிப்பு வழங்குவது மற்றும் சர்வதேச டிஜிட்டல் பொருளாதாரத்தில் இலங்கையின் வளர்ந்து வரும் பங்கேற்புக்கு ஆதரவளிப்பது போன்றவற்றுக்கும் SLT-MOBITEL தன்னை அர்ப்பணித்துள்ளது.
































