Nov 12, 2026 - 09:06 PM

நில்வலா கங்கையின் ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்துள்ளமையால், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஒன்று ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதற்கமைய, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, கம்புருபிட்டிய, திஹாகொட மற்றும் மாத்தறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள நில்வலா கங்கை பெருக்கெடுக்கும் சமவெளிகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கு இந்த வெள்ள அபாயம் உள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, குறித்த பிரதேசங்களில் வசிப்பவர்களும், அப்பகுதிகளின் ஊடாகச் செல்லும் சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
































