Nov 18, 2026 - 07:14 AM

அம்பலாங்கொடை, கந்தேகொட பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோகிராம் 400 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளைப் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மாத்தறை முகாம் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் மீட்டுள்ளனர்.
நேற்று (17) காலை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மாத்தறை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, மயானம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருள் மேலதிக நடவடிக்கைகளுக்காக அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கண்டறிந்து கைது செய்வதற்காக அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

































