Nov 18, 2026 - 01:28 PM

பிக்பாஸ் சீசன் 9 இல் பங்கேற்று சர்ச்சைக்குள்ளாகி ரெட்கார்ட் வாங்கி வெளியேறியவர்கள் தான் பார்வதி - கம்ருதீன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இருவரும் காதலித்து வந்த நிலையில், ஒருவருடம் கூட தாண்டாமல் முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்து வருகிறது.
பிக்பாஸ் சீசன் தொடக்கத்தில் இருந்தே பார்வதி மற்றும் கம்ருதீன் நெருக்கமாக இருப்பது பலரும் அறிந்த ஒன்றுதான். பிக்பாஸ் சீசன் 9 இல் சாண்ட்ராவை எட்டி உதைத்ததால் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
இருவரும் வெளியே வந்தப்பின் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் அறிவித்தனர்.
இருவரும் இருவரும் ஒன்றாக வெளிநாட்டுக்கு சென்று ரொமான்ஸ் செய்வதுமாக இருந்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று அவர்களின் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்நிலையில், பார்வதியும் கம்ருதீனும் அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்துள்ளார்களாம். அதுமட்டுமின்றி இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களையும் டெலீட் செய்துவிட்டார்களாம். அதோடு மட்டுமில்லாமல் பார்வதியின் அம்மாவும் பார்வதியும் இணைந்து ஒரு வீடியோவை பகிர்ந்தனர்.
அதில் பேசிய பார்வதியின் அம்மா, இப்போதுதான் பார்வதிக்கு குடும்பத்தின் மீது கவனம் வந்துள்ளது. நாங்கள் சொல்வதை கேட்க ஆரம்பித்துள்ளார் என்று பேசினார். அதை உடனே டெலீட்டும் செய்துள்ளார். ஒரு வருடம் கூட காதலிக்காத இருவரும் நிரந்தரமாக பிரிந்துவிட்டார்களா? ஏதாவது மனக்கசப்பு காரணமாக தற்காலிகமாக விலகி இருக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

































