Nov 18, 2026 - 01:48 PM
By யாழ். நிருபர் பிரதீபன்
By யாழ். நிருபர் பிரதீபன்

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளடக்கப்படாமை மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான திட்டங்கள் முன்வைக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (18) நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக ஊழியர்கள் ஒருநாள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்கக் கூட்டுக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கம் ஆகியனவும் நாளை ஒருநாள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பிலும் கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர்.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளடக்கப்படாமை மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் முன்வைக்கப்படாமை தொடர்பில் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ள தொழிற்சங்கங்கள், தமது நியாயமான கோரிக்கைகளை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது..
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

































