Nov 18, 2026 - 03:59 PM

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
ராவல்பிண்டியில் நேற்று (17) ஆரம்பமான இந்தப் போட்டியில் இலங்கையின் முதல் இன்னிங்ஸ் 98 ஓட்டங்களுக்குச் சுருங்கியதுடன், அதற்கமைய பாகிஸ்தான் அணி இலங்கையின் முதல் இன்னிங்ஸை விட 227 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
இரண்டாம் நாளான இன்று போட்டி ஆரம்பமாகும் போது பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 121 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
பாகிஸ்தான் இன்னிங்ஸை வெற்றிகரமான மட்டத்திற்கு உயர்த்துவதற்கு Ghazi Ghori உதவினார, அவர் 54 ஓட்டங்களைக் குவித்தார்.
இலங்கை சார்பில் பந்துவீச்சில் பிரகாசித்த லஹிரு குமார, 95 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

































