Nov 18, 2026 - 04:22 PM

மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான கடல் நிலைமைகள் குறித்து நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (18) பிற்பகல் 3.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தலானது நாளை பிற்பகல் 3.00 மணி வரை செல்லுபடியாகும்.
வங்காள விரிகுடாவின் தெற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு - மத்திய வங்காள விரிகுடா பகுதிகளில் விருத்தியடைந்த 'அக்வான்' (Akvan) புயலானது தீவிர சூறாவளி புயலாக வலுவடைந்து, இன்று (18) முற்பகல் 11.30 மணியளவில், வட அகலங்கு 13.1°க்கும் கிழக்கு நெட்டாங்கு 85.4°இற்கும் அருகில் (திருகோணமலையிலிருந்து ஏறத்தாழ 680 கிலோமீட்டர தொலைவில்) மையங்கொண்டிருந்தது.
இந்தத் தொகுதியானது மேலும் வடக்கிற்குச் சாய்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, இந்தத் தீவிர சூறாவளி புயலானது நவம்பர் 20 ஆம் திகதி காலை 11.30 மணியளவில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையில் நெல்லூர் (Nellore) மற்றும் விசாகப்பட்டினம் (Visakhapatnam) இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, வட அகலாங்கு 10° - 20° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 80° - 95° இடைப்பட்ட கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சமூகத்தினர் பாதுகாப்பான இடங்களை நோக்கிப் பயணம் செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால எதிர்வுகூறல்கள் மற்றும் அறிவித்தல்கள் தொடர்பில் மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

































