Nov 22, 2026 - 01:15 PM

நாட்டின் 14 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று (22) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, நாளை முற்பகல் 11.00 மணி வரை செல்லுபடியாகும்.
அதற்கமைய அம்பாறை, குருநாகல், களுத்துறை, கேகாலை, கொழும்பு, காலி, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கும், கண்டி, மாத்தறை, மாத்தளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்.
இம்மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அத்திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
































