Header Logo

வணிகம்
சீலைன் ஷிப்பிங் (Ceyline Shipping) நிறுவனம் சர்வதேச கடலோடிகள் தினத்தில் கடலோடிகளுக்கு புகழாரம் சூட்டுகிறது

Jun 26, 2025 - 01:47 PM -

0

சீலைன் ஷிப்பிங் (Ceyline Shipping) நிறுவனம் சர்வதேச கடலோடிகள் தினத்தில் கடலோடிகளுக்கு புகழாரம் சூட்டுகிறது

இலங்கையின் கடல்சார் துறையில் முன்னோடியாக விளங்கும் சீலைன் ஷிப்பிங் (Ceyline Shipping) நிறுவனம் மற்றும் சீலைன் (Ceyline) குழுமம், சர்வதேச கடலோடிகள் தினத்தை ஜூன் 22 ஆம் திகதி பொல்கொட பயிற்சி நிலையத்தில் “சீலைன்-சீகெயார் (Ceyline- SeaCare): கடலோடிகளின் அர்ப்பணிப்பைப் போற்றுதல்” என்ற நிகழ்ச்சியுடன் கோலாகலமாகக் கொண்டாடியது. இந்நிகழ்வு, கடலோடிகளின் நாட்டிற்கும் உலகிற்கும் ஆற்றும் அளப்பரிய பங்களிப்பைப் போற்றும் நிறுவனத்தின் உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது. 

15 இற்கும் மேற்பட்ட கடல்சார் மற்றும் தளவாட சேவை நிறுவனங்களைக் கொண்ட சீலைன் (Ceyline) குழுமத்தின் முதன்மை முயற்சியாக, சீலைன்-சீகெயார் (Ceyline- SeaCare) நிகழ்ச்சி இலங்கை கடலோடிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உளமார்ந்த நன்றியையும் மரியாதையையும் தெரிவிக்கும் வகையில் அமைந்தது. இந்நாளானது மனநலம், நிதி நல்வாழ்வு மற்றும் தலைமைத்துவ மேம்பாடு போன்றவற்றை மையமாகக் கொண்ட பல்வேறு ஈடுபாட்டுடன் கூடிய நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. சீலைன் (Ceyline) நிறுவனம், கடலோடிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனை மேம்படுத்தும் வகையில் பிரத்யேக விசுவாசத்தின் நன்மைகளையும் அறிமுகப்படுத்தியது. 

மேலும் முக்கியத்துவம் சேர்க்கும் வகையில் இந்நிகழ்வில் பங்கேற்ற இலங்கையின் முன்னணி பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கடலோடி தொழிலானது உயர் பலனளிக்கும் மற்றும் உலகளவில் மதிக்கப்படும் ஒரு தொழிலாக மட்டுமின்றி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய தேவையான அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் ஒரு தொழிலாகும் என்கிற விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. உலகளாவிய வர்த்தகத்தில் கடலோடிகளின் இன்றியமையாத பங்கினை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) இனால் சர்வதேச கடலோடிகள் தினம் 2010ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகின் சுமார் 90 சதவீத பொருட்கள் கடல் வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் கடலோடிகள் உலகப் பொருளாதாரத்தின் புலப்படாத உயிர்நாடியாக விளங்குகின்றனர். இந்நாள், கடலில் பணியாற்றுவோரின் தியாகங்களையும் சவால்களையும் நினைவூட்டுவதாகவும், அரசாங்கங்கள், கப்பல் உரிமையாளர்கள் மற்றும் சமூகம் ஆகியவை அவர்களுக்கு நியாயமான நடத்தையையும் நலனையும் உறுதிப்படுத்த வேண்டுமென அழைப்பு விடுப்பதாகவும் அமைகிறது. 

40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நிபுணத்துவத்துடன் சீலைன் ஷிப்பிங் (Ceyline Shipping) நிறுவனம் இலங்கையின் முன்னணி கப்பல் பணியாளர் ஆட்சேர்ப்பு மற்றும் முகாமைத்துவ நிறுவனமாக விளங்குகிறது. உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனங்களுக்கு திறமையான மற்றும் தகுதியான கடலோடிகளை வழங்கி வருகிறது. சீலைன் (Ceyline), இலங்கையின் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கடல்சார் மற்றும் தளவாட குழுமமாக, கடல்சார், தளவாட, கல்வி, சுகாதாரம் மற்றும் ஓய்வு நேரத் துறைகளில் பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இக்குழுமத்தின் பங்களிப்புகளானது இலங்கை நாட்டின் கடல்சார் துறையின் தரத்தை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. 

இச்சர்வதேச கடலோடிகள் தினத்தில், சீலைன் (Ceyline) குழுமம் உலகெங்கிலும் உள்ள அனைத்து கடலோடிகளுக்கும் தனது உளமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. உங்களின் அர்ப்பணிப்பு, உறுதித்தன்மை மற்றும் கடின உழைப்பு உலக வர்த்தகத்தை இயங்கச் செய்து உலக சமூகங்களை இணைக்கிறது. உங்களின் உறுதியான பங்களிப்பையும் தியாகங்களையும் நாங்கள் மதிப்பதோடு கடல்சார் துறைக்கு உங்களின் அளப்பரிய பங்களிப்பிற்காக நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title