Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
மன்னார் வளைகுடா பகுதியில் கரையொதுங்கிய கடல் பசு!

Sep 20, 2025 - 01:40 PM

மன்னார் வளைகுடா பகுதியில் கரையொதுங்கிய கடல் பசு!
Mobitel Inner 1278

தமிழகத்தின் - திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் இறந்த நிலையில் கடல் பசுவொன்று கரை ஒதுங்கியுள்ளது. 

8 வயது மதிக்கத்தக்க கடல் பசு ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. 

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பல்லி, கடல் குதிரை, கடல் பசு, சிப்பி, சங்கு, பவளப்பாறைகள் என சுமார் 1400க்கும் அதிகமான அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலைகளில் சமீப காலமாக கடல் பசு, டொல்பின் உள்ளிட்டவை வலையில் சிக்குகிறது. 

அதனை உடனடியாக மீனவர்கள் உயிருடன் பத்திரமாக கடலில் விட்டு விடுகின்றனர். 

இந்நிலையில் இன்று காலை சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரையில் இறந்த நிலையில் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசுவை ஆய்வு செய்து உடற்கூறாய்வுக்காக கால்நடை வைத்தியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். 

இறந்த நிலையில் கரை ஒதுங்கியது இந்த கடல் பசு சுமார் 300 கிலோகிராம் எடை கொண்டது எனவும், அதன் அகலம் 115 செ.மீ, சுற்றளவு 230 செ.மீ எனவும் தெரியவந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 

இந்த கடல் பசு பாறைகளில் முட்டியதால் உயிரிழந்ததா அல்லது உடல் நிலை சரியில்லாமை காரணமாக உயிரிழந்ததா என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.


MOST READ

காணொளி
ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

Mobitel 1278