Aug 17, 2026 - 11:16 PM



இவ்வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அப்பிரிவின் அண்மைய தரவுகளின்படி, ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 6,914 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 19,671 பேருக்கும், கொழும்பு மாவட்டத்தில் 18,289 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 6,635 பேருக்கும், மாத்தறை மாவட்டத்தில் 6,040 பேருக்கும் டெங்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், களுத்துறை மாவட்டத்தில் 5,964 பேருக்கும், காலி மாவட்டத்தில் 5,063 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 4,946 பேருக்கும் டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அத்தரவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆகும் எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

























