Dec 2, 2025 - 07:32 PM -
0
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (02) மாலை 6.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின்படி, அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதுடன், 366 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 25 மாவட்டங்களிலும் 437,507 குடும்பங்களைச் சேர்ந்த 1,558,919 பேர் (15 இலட்சத்து 58 ஆயிரத்து 919 பேர்) பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களுக்காக நாடளாவிய ரீதியில் 1,433 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாம்களில் 61,875 குடும்பங்களைச் சேர்ந்த 232,752 பேர் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சொத்து சேதங்களைப் பொறுத்தவரையில், 783 வீடுகள் முழுமையாகவும், 31,417 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

