Header Logo

விளையாட்டு
152 ஓட்டங்களில் சுருட்டிய இங்கிலாந்தை 110 ஓட்டங்களில் மடக்கிய அவுஸ்திரேலியா!

Dec 26, 2025 - 01:59 PM -

0

152 ஓட்டங்களில் சுருட்டிய இங்கிலாந்தை 110 ஓட்டங்களில் மடக்கிய அவுஸ்திரேலியா!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஏஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. 

இந்நிலையில் அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கியது. நத்தார் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் இப்போட்டி பொக்சிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. 

இந்த டெஸ்ட் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 5.00 மணிக்கு தொடங்கியது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. 

இதையடுத்து அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடியது. 

இங்கிலாந்தின் ஜோஷ் டங், அட்கின்சனின் அபார பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் 45.2 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

அணி சார்பில் மைக்கேல் நெசர் அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். 

இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 5 விக்கெட் வீழ்த்தினார். அட்கின்சன் 2 விக்கெட்டும், ஸ்டோக்ஸ், கார்சே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 16 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

கிராலி 5, டக்கெட் 2, பெத்தெல் 1, ரூட் 0 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனையடுத்து ஹாரி ப்ரூக்- பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 50 ஓட்டங்கள் சேர்த்தது. ப்ரூக் 41 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். 

அதனை தொடர்ந்து ஸ்மித் 2, வில் ஜக் 5, ஸ்டோக்ஸ் 16, கார்ஸ் 4, ஜோஸ் டங் 1 என வரிசை கட்டினர். 29.5 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்த இங்கிலாந்து அணி 110 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில்நெசர் 4 விக்கெட்டும், போலண்ட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதனையடுத்து 42 ஓட்டங்கள் முன்னிலையில் அவுஸ்திரேலிய அணி களமிறங்கியது. 

ஒரு ஓவர் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title