Dec 29, 2025 - 06:17 PM -
0
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார்.
அவரது பயிற்சியின் கீழ் டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்தியா படுதோல்வியடைந்தது.
இதனால், டெஸ்ட் அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பில் இருந்து கம்பீரை நீக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின.
டெஸ்ட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக விவிஎஸ் லக்ஸ்மன் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பில் இருந்து கம்பீரை நீக்கும் திட்டமில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், தலைமை பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர் குறித்து செய்திகள் தொடர்ந்தும் பரவி வருகின்றன. ஆனால், டெஸ்ட் அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பில் இருந்து கம்பீரை நீக்கும் திட்டமில்லை. இது குறித்து பிசிசிஐ தலைவர் தேவஜித்தும் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

