Header Logo

விளையாட்டு
ஆஷஸ் தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா!

Jan 8, 2026 - 11:45 AM -

0

ஆஷஸ் தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா!

ஆஷஸ் தொடரின் 5 ஆவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 384 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 

இதனை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியில் ஹெட் தொடர்ந்து பொறுப்புடன் ஆடி ஓட்டங்களை குவித்தார். 

அவருடன் ஸ்மித் இணைந்து நிலைத்து ஆடி ஓட்டங்களையும் குவித்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை இருவரும் நாலாபுறமும் சிதறடித்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர். முதல் இன்னிங்சில்அவுஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 567 ஓட்டங்களை பெற்றது. முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 183 ஓட்டங்கள் முன்னிலையிலும் இருந்தது. 

இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தேல் சிறப்பாக விளையாடினார். 

தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய அவர் சதமடித்து அசத்தினார். மற்ற வீரர்களில் டக்கெட் , ஹாரி புரூக் தலா 42 ஓட்டங்களை எடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 4 ஆவது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்களை எடுத்தது.119 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. 

இன்று (08) கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியில் பெத்தேல் 154 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 2 ஆவது இன்னிங்சில் 88.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 342 ஓட்டங்களை பெற்றது. 

இதன் மூலம் அவுஸ்திரேலிய அணிக்கு 160 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 

168 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை இழந்து 31.2 வெற்றி இலக்கை அடைந்தது. 

அவுஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

title