Header Logo

விளையாட்டு
டி20 கிரிக்கெட்டில் 12,000 ஓட்டங்களை கடந்த ஃபாஃப் டு பிளெசிஸ்

Jan 8, 2026 - 12:02 PM -

0

டி20 கிரிக்கெட்டில் 12,000 ஓட்டங்களை கடந்த ஃபாஃப் டு பிளெசிஸ்

எஸ்.ஏ.20 லீக் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்ற நிலையில், நேற்று (07) நடந்த லீக் போட்டியில் எம்.ஐ.கேப்டவுன் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

மழை காரணமாக இந்தப் போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நாணய சுழற்சியில் வென்ற கேப்டவுன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 123 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக அணி தலைவர் பாப் டூ பிளசிஸ் 44 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். 

அடுத்து ஆடிய எம்ஐ கேப்டவுன் அணி முதலில் தடுமாறியது. இருப்பினும் அந்த அணி 11.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியதுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இந்த போட்டியில் 44 ஓட்டங்களை சேர்த்ததன் மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் பாப் டூ பிளசிஸ் டி20 கிரிக்கெட்டில் 12,000 ஓட்டங்களைக் கடந்து அசத்தியுள்ளார். 

இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12,000 ஓட்டங்களைக் கடந்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title