Header Logo

விளையாட்டு
ஓய்வை அறிவித்த அவுஸ்திரேலிய மகளிர் அணியின் தலைவர்

Jan 13, 2026 - 08:53 AM -

0

ஓய்வை அறிவித்த அவுஸ்திரேலிய மகளிர் அணியின் தலைவர்

அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் அலிசா ஹீலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 

இவர் புகழ்பெற்ற அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி ஆவார். 

இவர் ஒரு அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பர் ஆவார். மெக் லானிங்கின் ஓய்வுக்குப் பிறகு, அவுஸ்திரேலிய அணியின் தலைவராக பொறுப்பேற்று அணியை வழிநடத்தி வருகிறார். 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அலிசா ஹீலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

பெப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. 

அந்த தொடருக்குப் பிறகு ஓய்வு பெற உள்ளார். தனது போட்டித்தன்மை சற்று குறைந்துவிட்டதாக உணர்வதாலும், இளம் வீராங்கனைகளுக்கு வழிவிட நினைப்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 

35 வயதாகும் அலிசா மார்ச் 6 முதல் 9 வரை பெர்த்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டி அவரது கடைசி சர்வதேச ஆட்டமாக இருக்கும். 

தனது 15 ஆண்டுகால வாழ்க்கையில், 7,000-க்கும் மேற்பட்ட சர்வதேச ஓட்டங்கள் மற்றும் 275 விக்கெட் கீப்பிங் டிஸ்மிசல்களை செய்துள்ளார். மேலும், 8 உலகக் கிண்ண பட்டங்களை வென்ற அணியின் ஒரு பகுதியாக இருந்துள்ளார். 

மகளிர் டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீராங்கனைகளில் ஒருவர். இவர் 2022 ஒருநாள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 170 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title