Header Logo

விளையாட்டு
களத்தில் கடுப்பான பாபர் அசாம்!

Jan 17, 2026 - 02:50 PM -

0

களத்தில் கடுப்பான பாபர் அசாம்!

அவுஸ்திரேலியாவில் 2025/26 பிக்பேஷ் டி20 தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் வீரர்களான ஸ்மித் மற்றும் பாபர் அசாம் இடையே நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

இந்த தொடரில் நேற்று (16) சிட்னியில் 37 ஆவது போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின. அதில் தண்டர் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிக்ஸர்ஸ் அணி தோற்கடித்தது. 

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்னி தண்டர் அணி 187 ஓட்டங்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக அணி தலைவர் டேவிட் வார்னர் சதமடித்து 110* (65) ஓட்டங்களை குவித்தார். அடுத்து விளையாடிய சிக்ஸர்ஸ் அணி 17.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 பெற்று வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 100 (42), பாபர் அசாம் 47 (39) ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தனர். 

இப்போட்டியின் 11 ஆவது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுக்க முயன்ற பாபரின் அழைப்பை ஸ்மித் தவிர்த்தார். இதனால், பாபர் சிறிது கடுப்பானார். ஆனால், அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு ஸ்மித் 32 ஓட்டங்களை சேர்த்தார். 

பின்னர் 13 ஆவது ஓவரின் முதல் பந்திலேயே பாபர் போல்டானார். இதனால் வெளியேறும் போது, பவுண்டரி லைனை தாக்கி தனது விரக்தியை பாபர் வெளிப்படுத்தினார். இது தற்போது பேசு பொருளாகியுள்ளது.

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title