Header Logo

விளையாட்டு
முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய RCB

Jan 20, 2026 - 10:40 AM -

0

முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய RCB

5 அணிகள் பங்கேற்றுள்ள 4 ஆவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் இந்தியாவின் நவிமும்பையில் நடந்தன. 

இதனையடுத்து எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்று வருகிறது. 

நேற்று (19) இரவு 7.30 மணிக்கு இடம்பெற்ற 12 ஆவது லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்சுடன் மோதியது. 

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிக்கிற 178 ஓட்டங்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

இந்த வெற்றியின் மூலம் மகளிர் ப்ரீமியர் லீக் நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தகுதி பெற்றுள்ளது. 

ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title