Jan 26, 2026 - 06:50 AM -
0
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து நடைபெற்ற முதல் 2 டி-20 போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி நேற்று கவுகாத்தியில் நடைபெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 160 ஓட்டங்களை பெற்றது.
அந்த அணி சார்பில் அதிகபட்சமாக பிலிப்ஸ் 48 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 10 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 08 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
யுவராஜ் சிங்கிற்கு அடுத்த படியாக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்தார்.
இந்நிலையில் 05 போட்டிகள் கொண்ட இந்த டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

