Header Logo

விளையாட்டு
டி20 கிரிக்கெட்டில் முதல் அணியாக சாதனை படைத்த இந்தியா!

Jan 26, 2026 - 03:26 PM -

0

டி20 கிரிக்கெட்டில் முதல் அணியாக சாதனை படைத்த இந்தியா!

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஆவது டி20 போட்டி நேற்று (25) நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை எடுத்தது. 

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 10 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 155 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 (5) என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. 

அந்த வகையில் இரு நாட்டு டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றிய 9 ஆவது தொடர் இதுவாகும். இந்த வகையில் பாகிஸ்தான் முதலிடத்தில் (10 தொடர் வெற்றி) உள்ளது. 

இரு நாட்டு தொடருடன், 20 ஓவர் உலகக் கிண்ணம் மற்றும் ஆசிய கிண்ணத்தையும் சேர்த்தால் இந்திய அணி தொடர்ச்சியாக தனதாக்கிய 11 ஆவது தொடராக இது அமையும். 

154 ஓட்டங்கள் இலக்கை இந்திய அணி 60 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்துள்ளது. Full Member Nations இடையே நடந்த டி20 கிரிக்கெட்டில் 150 ஓட்டங்களுக்கு மேலான இலக்கை 10 ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்த முதல் அணி இந்தியா தான்.

MOST READ

காணொளி
வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை

வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

title